கோமா-ளி | இது திரை விமர்சனம் அல்ல




கொஞ்சம் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணலாமேங்கற ஐடியா வந்தப்போ வழக்கம்போல மைன்டுக்கு வந்த யோசனை ஏதாவது படத்துக்கு போலாம்ங்கறதுதான். சரின்னு ப்ரூக்பீல்ட்ஸ் மால்ல இருக்கிற ஸ்பை (SPI) சினிமாஸ் வெப்சைட்ட ஓபன் பண்ணி 'கோமா'ளிய க்ளிக் பண்ணி டிக்கெட்ஸ் இருக்கான்னு பாத்தா... ஐ.! ஜாலி டிக்கெட் இருக்கு கூடவே ஒரு ஐயோ! ஷாக் எதுக்குன்னா டிக்கெட் விலை 190.74 கூட ₹30+ புக்கிங் சார்ஜஸ் வேற ஆக மொத்தம் ஒரு டிக்கெட் 220+ அப்படின்னா ரெண்டு டிக்கெட் 450+ ஆகும்ல...

"டேய்... எல்லாஞ்சரி இவளோ பேசரீல ஏன் மாலுக்கு போற வேற எவளோவோ தியேட்டர் இருக்குல்ல"

"தியேட்டர் எல்லாம் இருக்கு... ஆனா மால்கள் மட்டுந்தான ஆக்ஸஸபிளிட்டியோட இருக்கு?"

"புரியலையே..."

"ம்க்கும்... அதாவது மால்கள்ல தான் வீல்சேரோட எங்க வேணும்னாலும் போக முடியம் படிகள், மேடுகள் போன்ற தடைகள் இருக்காது லிஃப்ட் மற்றும் ரேம்ப்கள் எல்லா இடங்களுக்கும் இருக்கும். அதுவுமில்லாம மால் நிர்வாகம் அவங்களே வீல்சேரும் வச்சிருப்பாங்க"

"ஓ வீல்சோரட உலாத்த ஒரு ஸ்பேஸ் இருக்குன்னா அது ஆக்ஸஸபிள் ஏரியாவா?"

"அதுமட்டுமே ஆக்ஸஸபிள் இல்லன்னாலும் எஸ் இத அந்த டாப்பிக்ல ஒரு அ'னா ஆ'வன்னா மாதிரின்னு வச்சுக்கலாம்"

"நீ ஏதோ தெளிவாத்தான் சொல்ற எனக்கு கொஞ்சம் கொழப்புது அத விடு இதுல நீ ஏன் ஷாக் ஆவுற அத ஸ்ட்ரெயிட்டா சொல்லு"

"எனக்கு தியேட்டர் போய் படம் பாக்க ஆச, ஆனா சாதாரண தியேட்டர்கள்ல ஆக்ஸிஸபிளிட்டி இல்ல. மல்ட்டிபிளெக்ஸ்கள், மால்கள் தான் ஆக்ஸஸபிளா இருக்கு ஆனா அங்க டிக்கெட் விலை கொக்கமக்கா வேற லெவல்ல இருக்கு. வீல்சேர் ஃபிரென்ட்லியா இருக்கற இடம் பாக்கெட்மனி ஃப்ரென்ட்லியா இல்ல, பாக்கெட்மனி ஃப்ரென்ட்லியா இருக்கற இடம் வீல்சேர் ஃப்ரென்ட்லியா இல்ல"

"இப்போ என்ன சொல்ற மால்கள் மற்றும் மல்ட்டிபிளெக்ஸ்கள் டிக்கெட் விலைய நியாயமா வைக்கனுங்கறியா இல்ல மற்ற தியேட்டர்கள வீல்சேர் ஃப்ரென்ட்லியா மாத்தனுங்கறியா?"

"ரெண்டும்..."

"இது சாத்தியமே இல்ல"

"ஏன் இல்ல... லுக் நாம சிட்டிகுள்ள இருக்கோம் மால்கள்ல டிக்கெட் விலை குறைஞ்சிருச்சு போய் படம் பாக்கறோம் ஓகே ஆனா கொஞ்சம் ஊருக்கு வெளிய உள்ள மக்கள் படம் பாக்கனும்னே காரு / கால்டாக்சி புடிச்சு வந்து தியேட்டருக்கு போக முடியுமா? கால்டாக்சி செலவு பாத்தே படத்துக்கு போற ப்ளான பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தவிர்ப்பாங்கல்ல அப்போ அவங்க அவங்க ஏரியால பக்கத்துல உள்ள தியேட்டர்கள் ஆக்ஸஸபிளா மாறுறது தானே சரி"

"எல்லாஞ்சரி இப்போ 'கோமா'ளி பாக்க போறமா இல்லயா?"

"ஆக்ஸஸபிளிட்டி அவேர்னஸ் 'கோமா'ல கிடக்கு உனக்கு இப்போ 'கோமா'ளி கேக்குதா ரெண்டு வாரத்துல எச்.டி பிரிண்ட் வந்துடும் அப்போ பாத்துக்கலாம் இப்போ போய் ஆடை, கொரில்லா, K-13, URI, வெ.க.குழு2 எல்லாம் வந்துருக்கு டவுன்லோட போட்டு பாப்போம் போ"

"அதான் சரி..."

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?