இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?
இட்லியை எஞ்சாய் செய்வது எப்படி ? (சைவம்)
அது என்னடா தலைப்புல அடைப்புக்குறிகளுக்குள்ள சைவம் அப்படின்னு போட்டிருக்கேன்னு பார்க்கிறீங்களா... அது ஒண்ணும் இல்லைங்க இந்த பதிவுல நாம பார்க்க போறது சைவ சைட்டிஷ் காம்போக்களுடன் கூடிய இட்லி வகைகள் அப்போ அசைவம்னா தக்காளி தொக்கா என்று எண்ணாதீர்கள் அது தனி பதிவில்
சரி இட்லியை எஞ்சாய் செய்ய துவங்கும் முன் அடிப்படையாக பரவலாகக் கிடைக்கின்ற சிலபல இட்லி வகைகளையும் அதன் செய்முறை கேட்டகிரி வாயிலாக மூன்று அல்லது நான்கு விதங்களாக பிரித்துக் கொள்வோம் அதன்பின்னர் இக்கட்டுரையின் முக்கிய பகுதிக்கு செல்வோம்.
இட்லி 1 : இட்லி குண்டான் என்று பரவலாக அறியப்படுகின்ற ஒரு பாத்திரத்தில் செய்யப்படுவது நீராவியில் வேக வைக்கும் பொழுது இட்லி மாவை நேரடியாக தட்டில் ஊற்றாமல் ஈரமான ஒரு துணியை தட்டில் பரப்பி அதில் இட்லி மாவை ஊற்றி தயார் செய்யப்படும்.
இட்லி 2 : மேற்சொன்ன இட்லி குண்டான் பாத்திரத்தில் செய்யப்படுவது போல தான் என்றாலும் நகர்ப்புறங்களில் இது சாப்பாடு செய்யும் குக்கருக்குள் வைத்து செய்யப்படுகிறது இதற்கு பெயர் குக்கர் இட்லி. குக்கருக்குள் வைக்கக் கூடிய சிறிய அளவிலான தட்டுக்கள் என்பதால் நேரடியாக குழிகளுக்குள் ஊற்றி வைத்து சமைக்க துவங்கிவிடுவார்கள் (பெரும்பாலும் துணி போடப்படாது)
இட்லி 3 : மைக்ரோவேவ் மற்றும் எலெக்ட்ரிக் குக்கர் இட்லிகள். இவைகளும் குக்கர் இட்லி போலவே ஈரத்துணி இல்லாமல் உருவாக்கக் கூடியவை.
இட்லி குண்டான் முறையை தவிர்த்து ஏனைய முறைகளில் இட்லி தயாரிக்கிறீர்கள் எனில் மாவை குழிகளுக்குள் ஊற்றும் முன்னர் அவ்விடத்தில் விரல்களால் எண்ணெயை விட்டு பின்பு மாவை ஊற்றினால் அவித்து எடுக்கும் போது இட்லி பிய்ந்து போகாமல் வரும்.
ஆகவே மக்களே இட்லி குண்டானில் ஈரத்துணி போட்டு தயாரிக்கப்படும் பெரிதான மிருதுவான இட்லிகள் தான் ஆத்மார்த்தமான ஒரு சுகானுபவத்தை நமக்குத் தருகிறது. குக்கர் இட்லிகள் ஓரளவுக்கு இந்த அனுபவத்தை தர முயற்சிக்கின்றன... ஆனால் மைக்ரோவேவ் மற்றும் எலெக்ட்ரிக் குக்கர் இட்லிகள் மினி இட்லி வகைகள் கேட்டகிரியில் சேர்ந்துவிடக்கூடியவை...
சாப்பிடுதல் என்பது ஒவ்வொருவருக்கு ஒரு ஸ்டைல் ஆகவே இனி இப்பதிவு முழுதும் நான் இட்லியை எப்படி எஞ்சாய் செய்கிறேன் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்போம்.
சுட சுட இட்லியை அடுப்பில் இருந்து இறக்கியவுடன் 3 இட்லியை தட்டில் போட்டு நெய் அல்லது எண்ணெய் தடவி ஒரு பெறட்டு பெறட்டி வைத்து கொள்ளவேண்டும் கூட தொட்டுக்க சற்றே நீரோட்டமான தேங்காய் சட்னி. சூடு ஆறிவிடுவதற்கு முன்பாக சட்னியை தொடாமல் வெறும் இட்லி ஒரு நாலு வாய் சாப்பிடவேண்டும். இளஞ்சூட்டில் இளவம்பஞ்சு போன்ற இட்லி வாய்க்குள்ளிருந்து தொண்டையில் இறங்கும்போது அடடடடே வார்த்தைகளே இல்லை. இப்பொழுது அடுத்த ரவுண்டு அதே சூட்டோடு ஆனால் சட்னியுடன். அயன் படத்தில் ஜெகன் போதை மருந்து காப்ஸ்யூலை தேன் தொட்டு விழுங்குவாறே அதுபோல இட்லியை நீட்டவாக்கில் பீய்த்து சட்னியில் முக்கி அப்படியே தொண்டையில் இறக்கிவிடவேண்டும் இச்சமயம் கண்ணை மூடி பாருங்கள் காலப்பயணம் செல்வதுபோலவே இருக்கும்.
ஓகே டைம் டிராவல் முடிஞ்சிது இப்போ கொஞ்சம் ஆறுன இட்லி இருக்கே வாட் ட்டூ டூ? அந்த இட்லிய எடுத்து நாலா பிச்சு சட்னியா அதுமேல ஊத்தி நல்லா பிசைஞ்சு குட்டி குட்டி உருண்டையா உருட்டி சட்னிக்குள்ள இருக்கற தாளிப்புகள் இங்க்லூடிங்க் மொரு மொரு கருவேப்பிலை எல்லாம் சேர்த்து சாப்ட்டோம்ன்னு வைங்க வேற லெவல்.
ஆங்... இட்லி சட்னி ஓவர் நல்லா சாப்பிட்டோம் ஆனாலும் ஏதோ குறையுதேன்னு தோணுதுள்ள எஸ் எக்ஸாக்ட்லி அது வேற ஒண்ணுமில்ல பில்டர் காப்பி.
சூடான இட்லி இருக்கு ஆனா சட்னி இல்ல... ஒண்ணும் பிரச்சனை இல்ல அந்த இட்லி பொடின்னு ஒரு வஸ்த்து இருக்கு அத எடுத்து தட்டுல கூமாச்சியா கொட்டி ஆள்காட்டி விரலாள குழி வெட்டி அது கொள்ளும் அளவு எண்ணெய் ஊத்தி நல்லா கொழப்பி வச்சுக்கிட்டு இட்லிய நீளமா பிச்சு அதைக்கொண்டு இத ஐஸ்கிரீம் மாதிரி எடுத்து சாப்பிட்டோம்ன்னா செம்மையா இருக்கும்.
இப்பொழுது அடுத்த சைட்டிஷ் காம்போ தக்காளி குருமா வகையறாக்கள்... தக்காளி கொழம்புக்குள்ள வெள்ளை சுண்டலுடன் உருளைக்கிழங்கு போட்டு குருமா வச்சுக்குறோம்ன்னு வைங்க இட்லிய சாப்பிட சாப்பிட குருமாவுக்குள்ள இருக்கற சுண்டல பொறுக்கி சாப்பிடுறது ஒரு ஜாளி அனுபவம். இதே குருமாவுக்குள்ள நீட்ட நீட்டமா பெரியவெங்காயம் வெட்டிபோட்டு கூட உருளைக்கிழங்கு (அ) காளிஃப்ளவர் + பட்டாணி கடலை போட்டும் குருமா வைக்கலாம், தேங்காய் அரைத்து வைக்கும் வெள்ளை குருமா அடுத்த லெவல் இந்த அத்துணை குருமா வகைகளுடனும் இட்லியை தொட்டும் சாப்பிடலாம் பிசைந்தும் சாப்பிடலாம் இடையிடையே சுண்டல், உருளைக்கிழங்கு, காளிஃப்ளவர் ஆகியவற்றை கொறித்துக் கொள்வது கொண்டாட்டத்திற்கு கியாரன்ட்டி.
தேங்காய் சட்னி, குருமாவை தொடர்ந்து இப்பொழுது ரெடியாக இருப்பவை புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கெட்டிச் சட்னி, காரச் சட்னி, பீட்ரூட் சட்னி போன்றவைகள்... இவற்றையெல்லாம் இட்லிபொடியை ஐஸ்கிரீம்போல எடுத்து சாப்பிட்டோமே அந்த ஸ்டைலில் சாப்பிடவேண்டும் ஒரு இட்லியை முடித்து அடுத்த இட்லிக்கு போவதற்கு முன் கட்டாயம் ஒரு மிடறு காப்பி மஸ்ட்.
அடேய் அப்போ சாம்பார் இட்லின்னு என் பொடனிக்கு பின்னாடி ஒரு வாய்ஸ் கேக்குது.... இருய்யா அங்க தான் வரேன்...
பொதுவாகவே உணவகங்களில் இட்லிக்கு டிஃபால்ட் காம்போவாக இருப்பது சாம்பார் தான். அதனாலாயே சில ஓட்டல்பளில் சாம்பார் இட்லி என்றே பெயர் வைத்திருப்பதும் உண்டு. தட்டில் அளவாக இரண்டே இட்லி வைத்து அது இரண்டும் முங்கும் அளவு சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் இதில் இட்லி சாம்பார் இரண்டுமே சூடாக இருத்தல் நலம் ஒரு இட்லியை துண்டு துண்டாக பீய்த்து சாம்பார் வழிய வழிய சாப்பிடலாம் அடுத்த ரவுண்டை பிசைந்து அடித்துவிட வேண்டியதுதான் பக்கத்துணையாக ஒரு சின்ன கின்னத்தில் சாம்பாரில் மூழ்கியபடி இருக்கும் வடை இருந்தால் இட்ஸ் அமேசிங். ஃபினிஸிங் டச்சாக ஃபிள்டர் காஃபி மஸ்ட் ஸ்ட்ராங்கா சக்கரை கம்மியா...
இதோ பாரு கண்ணு இந்த குருமா, சட்னி, சாம்பார் இதெல்லாம் சுத்தமா செட்டாகாது காரமில்லாத காம்போவா இட்லிக்கு ஜோடி சொல்லுன்னாலும் செம்ம காம்போஸ் இருக்கு அதில் முதலாவது கிஸான் ஃப்ரூட் ஜாம் அப்பறம் சக்கரை வெள்ளை சக்கரை நல்லதில்ல அதனால் மண்டை வெள்ளம் அப்பறம் தயிர் மட்டும் ஊத்தி பிசைஞ்சும் சாப்பிடலாம் இதெல்லாம் சும்மாச்சுக்கும் பரிந்துரைகள் மத்தபடி நமக்கு இரசனை மிகவும் காரசாரமானது சாப்பிட சாப்பிட வேர்த்துக்கொட்டி கண்ணுல மூக்குல தண்ணி ஊத்தற அளவு காரம்னாலும் காம்பேக்ட்டான காம்போ செட் ஆகிட்டா செம்மையா எஞ்சாய் பண்ணலாம்.
அப்பறம் இந்த பதிவோட துவக்கத்தில சொன்ன மாதிரிதான் இந்த போஸ்ட் இட்லி + சைவம் சைட்டிஷ் காம்போ ஸ்பெசல். அடுத்த பதிவுல எக்ஸ்க்லூசிவ் அசைவ சைட்டிஷ்கள் + இட்லி காம்போ வகைகள இரசிப்போம்.
விரல் சூப்பி, சப்புக்கொட்டி ஜாலியா சாப்புட்டு வாழ்கைய எஞ்சாய் பண்ணுவோம் மக்கா...

Comments
Post a Comment