கோவை - மேட்டுப்பாளையம் : முதல்முறையாக இரயிலில்
இன்று சுதந்திர தினம் எல்லோரும் நாம் படித்த அல்லது படிக்கின்ற பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு சென்று நமது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்போம் இன்னும் சிலர் தங்கள் பணி புரிகின்ற அலுவலகங்களில் சென்று கொண்டாடி இருப்போம்.
நான் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடினேன் சற்று வேறு விதமாக... அதாவது தேசத்திற்கான மிக முக்கியமான வளர்ச்சியின் பாதையில் முதன்மையானதாக இருக்கக்கூடிய கிராமசபை நிகழ்வின் கூட்டத்திற்கு என்னை இன்று நான் முதன்முறையாக அறிமுகம் செய்து கொண்டேன்.
இந்திய நாட்டின் முதுகெலும்பு அதன் கிராமங்கள் என்று நமது தேசத்தந்தை கூறியிருப்பதாக நாம் அறிந்திருக்கிறோம் அத்தகைய கிராமங்களின் முன்னேற்றமே இந்த தேசத்தின் முன்னேற்றம் என்றால் அந்த முன்னேற்றத்திற்கு பல்வேறு பாதைகளும் பல்வேறு செயல்திட்டங்களும் இருக்கும் பட்சத்திலும் கூட சுயசார்பு சுய ஆட்சி முறை வழியில் ஒரு பஞ்சாயத்தின் கீழ் இருக்கக்கூடிய கிராமங்கள் அதனுடைய மக்களிடமிருந்து எத்தனை வரிகள் பெறுகின்றன அதன் மூலம் அந்த மக்களுக்கான வசதிகளை அந்த அரசும் நிர்வாகமும் ஏற்படுத்தி தருகின்றனவா என்பதை வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அதாவது கிராமத்தின் மொத்த மக்கள் தொகை பிரதிநிதிகளாக மூன்றில் ஒரு பங்கு மக்களும் மற்றும் அரசின் பல்வேறு படிநிலைகளில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளும் அலுவலர்களும் பங்கேற்கும் கூட்டம் தான் இந்த கிராம சபை கூட்டம்.
இதை வெறுமனே இந்த வாக்கியங்களில் வரிகளில் வார்த்தைகளாக வாசிப்பதால் மட்டும் புரிந்து விடாது அல்லவா அதனால் தான் முதன்முறையாக இன்று நான் ஒரு கிராம சபை நிகழ்வில் கலந்து கொண்டேன். நிறைய கற்றல்கள் நிறைய புரிதல்கள் பல்வேறு படிநிலைகளில் மனம் பக்குவப் படுகிறது என்பதை உணரமுடிகிறது. இந்த சுதந்திர தினத்தில் நல்லதொரு கற்றல் நிகழ்ந்திருக்கிறது. அடிமை விளங்கு ஒடித்து வாங்கிய விடுதலையை நாம் கொண்டாடாமல் இருக்க முடியாதுதான் என்ற போதும் நம் தேசத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக மாறிவரும் சூழலுக்கு ஏற்றபடி நாமும் நமது செயல்முறைகள் திட்டங்கள் யூகங்கள் அனைத்தையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பதும் உண்மைதானே நம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் இந்த முன்னேற்ற பாதையில் நாம் செல்லும் போது தான் அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்பதை நான் மிகவும் ஆழமாக நம்புகிறேன்.
கிராமசபை நிகழ்வுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஒரே பதிவில் ஒட்டுமொத்தமாக எழுத முடியாது அதற்கு மிக முக்கிய காரணம் முதலாவதாக நான் தெளிவாக இருத்தல் அவசியம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment