இனி எல்லாம் சுகமே
எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாக ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆண்டிற்கான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சர்ப்ரைசாக துவங்கிவிட்டன...
இதுவரை பார்த்திராத நிலப்பரப்பில் ஒரு நீண்ட தூர மாலை நேர பயணம் அதுவும் ஒரு மலைநாட்டிற்கு, இருபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் சாலைகளின் வழியே வளைந்து நெளிந்து மலை ஏறி ஒரு பள்ளத்தில் மெல்ல சரிந்து இறங்கி நண்பர் ஒருவர் வீட்டு புல்வெளியில் ஆகாய கூரைக்குக் கீழே அழகாக ஐக்கியமாக துவங்கினோம்.
இந்த இடத்தை தேர்வு செய்தது இந்த சர்ப்ரைஸ் நிகழ்வுக்கான நட்பு வட்டத்தை வர வைப்பது போன்ற அத்தனை பொறுப்புகளையும் எனக்கு தெரியாமல் ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக வடிவமைத்து நிகழ்வை ஒருங்கிணைத்த அன்பு தோழமை கல்ப்ஸ்க்கு ஆயிரம் ஹார்ட்டின்கள்...
குழந்தைகள் நண்பர்கள் தோழர்கள் எல்லோரும் ஒன்று சேர சேர "உங்களுக்கு துணையாக குட்டீஸ்களை அனுப்புகிறேன் நான் இப்பொழுது ஒரு சிறு குட்டித்தூக்கம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு சூரியன் டாட்டா காட்டி மறைந்துவிட்ட தருணத்தில் வான்வெளி எங்கும் குட்டி குட்டியாக எட்டிப் பார்த்தன விண்மீன்கள்"
திறந்தவெளி, புல்தரை, சில்லென்ற காற்று, சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்கள், குதூகலமும் மகிழ்வும் பொங்கும் உரையாடல்கள் நிறைந்த நண்பர்கள் கூட்டம், குழந்தைகளின் விளையாட்டு, இசை, நடனம், நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வேடிக்கை பார்த்தல் என 28 ஆம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் ஆனைகட்டி பகுதியில் இத்தனை அழகாக அற்புதமாக நடந்து கொண்டு இருந்தது.
பயணத்தில் துவங்கி கேக் கட் செய்வதற்கு முன்பாக திடீரென்று கிடைத்த புத்தாடை வரை அந்த மாலையும் இரவும் நடந்த அத்தனை விஷயங்களும் அடுத்தடுத்து ஆச்சரியங்களை எனக்கு தந்த வண்ணம் இருந்தன...
இத்தனை அழகியலும் மகிழ்வும் நிறைந்த அந்த எழில் கொஞ்சும் இயற்கை வளம் மிகுந்த இடத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கான ஏற்பாட்டையும் கல்ப்ஸும் நட்பூக்களும் செய்திருந்தனர்... இப்படி ஒரு அழகான கொண்டாட்டத்தின் போது மக்காத குப்பைகள் எதையும் அங்கே நாங்கள் போட்டதாக எனக்கு நினைவே இல்லை.
கொண்டாட்டம் என்பது மகிழ்வு நிகழ்வுகளின் தொடர்வு தானே...
இதோ 29ம் தேதி...
நமது வீட்டில் 29 ஆம் தேதி மாலை ஒரு நிகழ்வு... இந்த நிகழ்விற்கும் வருகின்ற நண்பர்களுக்கு தின்பண்டங்கள் கொடுப்பதற்கு நாம் ஒன் யூஸ் சமாச்சாரங்களை பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து சில திட்டங்களை போட்டோம். நிகழ்வின் இறுதி பகுதி வரை கிட்டத்தட்ட இந்த திட்டத்தில் எந்த தொய்வும் இல்லை ஆனால் நட்புகளுக்கு இனிப்புகளை வழங்கும் சூழல் வரும்போது அட தட்டுக்கள் போதுமான அளவில்லையே என்றெண்ணுகையில் அருகாமை வீட்டு அம்மையார் கொடுத்த ஸநாக்ஸ் தட்டுகள் பேருதவி செய்தன.
இந்தக் கொண்டாட்டத்தின் போதும் மக்காத குப்பைகள் என்று எந்த ஒன்றையும் நாங்கள் பயன்படுத்தவில்லை இல்லை என்பதை அன்று இரவு உறங்க செல்லும் முன் ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
ஒற்றை எண்ண அலைவரிசையில் ஒன்று சேர்ந்து நட்பும் சுற்றமும் நமது பிறந்தநாளில் கொண்டாடி களிக்கும் இத்தருணத்தில் எனது மகிழ்வும் புன்சிரிப்பும் இப்பேரண்ட பெருவெளி எங்கும் பிரதிபலித்து பல்கிப் பெருகுவதை ஆத்மார்த்தமாக உணர்கிறேன்.

இனி எல்லாம் சுகமே...
Comments
Post a Comment