சூப்பர் டீலக்ஸ் - Trailer Story Text Version
ஒரு நாள்
ஒரு ஆள்... மலைபாதைல தனியா போகையில திடீர்ன்னு அவன ஒரு புலி தொறத்துச்சுன்னா...
ஒரு நாள்
ஒரு ஆள்... மலைபாதைல தனியா போகையில புலி அவன திடீர்ன்னு தொறத்த... அவன் ஒளிய எடமில்லாம் ஓட ஓட புலி அவன நெருங்க நெருங்க அவன் மேடு ஏறி அந்தப்பக்கம் பாஞ்சா... அந்த சரிவுல ஒரு மரம் இருந்தா? அவன் இலைய விட்டு கிளைய விட்டு கடசில கைல சிக்குன கொடிய புடிச்சு தொங்குனா
(எனக்கு பயமாயிருக்கு ராமசாமி)
கீழ குதிக்கலாம்ன்னா அதல பாதாளம்...
மேல புலி காத்திருக்கு...
சரி இங்கயே இருப்போம்ன்னு அவன் நினைக்கிறப்போ அந்தக்கொடி மெல்ல அவன வளைச்சு அவன இறுக்குனா...
அந்தக்கொடி மலைப்பாம்புன்னு தெரிஞ்சிசுன்னா...
ஒரு நாள் ஒரு ஆள புலி தொறத்த அவன் ஓட ஒளிய எட்மில்லாம மேடதாண்டி சர்வுல பாஞ்சா அங்க மரமிருந்து இலைய விட்டு கிளைய விட்டு கடைசில சிக்குன கொடிய புடிச்சு தொங்க அந்தக்கொடி பாம்புன்னு தெரிய மேல புலி கீழ பள்ளம் அங்கயே இருக்கலாம்ன்னாலும் மலைப்பாம்பு முழுங்கிடும் என்னடா எழவு வாழ்க்கைன்னு அவன் மேல பாக்க... அந்ங்க ஒரு தேன்கூடு இருந்துச்சுன்னா... அதிலருந்து ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒழுகி அவன் வாய் பக்கத்துல வந்து விழுந்துச்சுன்னா...
ஒரு நாள் ஒரு ஆள புலி தொறத்த அவன் ஓட ஒளிய எட்மில்லாம மேடதாண்டி சர்வுல பாஞ்சா அங்க மரமிருந்து இலைய விட்டு கிளைய விட்டு கடைசில சிக்குன கொடிய புடிச்சு தொங்க அந்தக்கொடி பாம்புன்னு தெரிய என்னடா எழவு வாழ்க்கைன்னு அவன் மேல பாக்க... அங்க ஒரு தேன்கூடு இருந்தா அந்த தேன்கூட்ல இருந்து ஒரே ஒரு துளி தேன் நழுவி ஒழுகி அவன் வாய் பக்கத்துல வந்து விழுந்தா... மேல மரணம் கீழ சாவு அங்கயே இருந்தாலும் அழிவுன்னு எல்லா பக்கமும் முடிவு நிச்சயம்ன்னு தெளிவா தெரிஞ்சதுக்கு அப்பறமாவும்...!
ஒரு நொடி... பாம்ப்பாவது பள்ளமாவது, புலியாவது புன்னாக்காவதுன்னு உசுரு போனா மசுரு போச்சுன்னு கவலையே படாம நாக்க நீட்டி தேன நக்கி ஆகான்னு சொன்னா...
Comments
Post a Comment