இயலும் - துவக்கவிழா
மார்ச் 6, 2019 அன்று கோவை குமரகுரு கல்லூரியில் ABLE CLUB எனும் சங்கத்தை துவக்கியுள்ளனர்.
துவக்க விழாவின் முக்கிய அம்சமாக panel discussion என்று சொல்லப்படக்கூடிய கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த panel discussion-ல் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நான் பங்குபெற்று பேசினேன்.
திருநங்கைகள் வாழ்வியல் சூழலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் சகோதரி அமைப்பின் நிறுவனத்தார் மற்றும் எழுத்தாளர் கல்கி அவர்களையும். யாசகர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கி விட வேண்டும் என்று துடிப்போடும் கனவோடும் அக்ஷயம் அறக்கட்டளையை உருவாக்கி இயங்கி வரும் நவீன் அவர்களையும் சந்தித்துப் பேசி ஊக்கமும் உற்சாகமும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்த கலந்துரையாடல் மூலம் எனக்கு கிடைக்கப்பெற்றது.
மிக அற்புதமான ஆசிரியர் திரு. பிச்சைமுத்து அவர்கள் இந்த கலந்துரையாடலை நெறியாளுகை செய்தார்.
இப்படி ஒரு கிளப் ஏன் உருவாக வேண்டும்? இதில் இணைந்து கொள்வதன் மூலம் சமூகத்தில் எத்தகைய ஒரு மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்? சிந்தனையில் கொள்வதெல்லாம் சரிதானா அல்லது சற்றே மாற்றிக் கொள்ளவேண்டுமா போன்ற மாணவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதாக மட்டுமல்லாமல் நீங்கள் சரியானதொரு பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள் என்று ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த கலந்துரையாடல் அமையப் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
திருநங்கைகள் வாழ்வியல் சூழலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இயங்கிவரும் கல்கி அவர்களது பேச்சும் யாசகர்கள் இல்லாத தேசத்தை உருவாக்க இயங்கிவரும் நவீன் அவர்களது பேச்சும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது உற்சாகப்படுத்தியது.
போதிய நேரமின்மை காரணமாக மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பகுதி மட்டும் கலந்துரையாடலில் நீக்கப்பட்டது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக தீவிர ஒருங்கிணைப்பினாலும், கடும் பயிற்சியாலும் நல்ல வலுவானதொரு நிலையை அடைந்து வருகிறது கோவை சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி. இதற்கான அத்தனை கிரெடிட்ஸும் குணா அண்ணாவையும், சிற்றுலி பவுண்டேஷனையுமே சாரும். இந்த ABLE CLUB கலந்துரையாடல் வாய்ப்பு குணா அண்ணாவுக்கே கிடைத்தது ஆனால் அண்ணன் அதை எனக்கு கொடுத்திருக்கிறார்... அற்புதமான இவ்வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒட்டுமொத்த குரலை பதிவு செய்துள்ளேன் என நம்புகிறேன்.
-ஜக்கு
8/3/2019
Super..
ReplyDeleteஎண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteசொல் செயலாவது அரிது. சொற்களை செயலாக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDelete#நறுமுகை#