கடவுளின் கைபேசி எண் - ஒரு புத்தகத்தின் பயணக்கதை

சில வாரங்களுக்கு முன்பாக ட்விட்டரில் பாமரக்கவி என்னும் நண்பர் ஒருவருடைய கடவுளின் கைபேசி எண் என்கின்ற புத்தகம் பற்றிய இடுக்கை ஒன்றை காண நேர்ந்தது...


அடடே என்னது கடவுளின் கைபேசி எண்ணா... பெயரே வித்தியாசமாக இருக்கிறதே இதை வாசித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. உடனடியாக எழுத்தாளருடைய ட்விட்டர் கணக்கை தேடி கண்டுபிடித்து தொடர்பு கொண்டு புத்தகங்களை அனுப்ப இயலுமா என்று கேட்டேன் அவரும் முகவரியை வாங்கி கொண்டு சில நாட்களில் அனுப்புவதாக தெரிவித்தார். இரண்டு நாட்களில் மீண்டும் தகவல் அனுப்பி புத்தகங்களை அனுப்பியிருப்பதாகவும் வாசித்துவிட்டு கருத்துக்களைக் கூறுமாறும் தெரிவித்திருந்தார்.


இரண்டொரு நாட்கள் ஓடின, நான் நண்பன் ஒருவனுடன் தேநீர்க்கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது அந்தப் பக்கமாக வந்த போஸ்ட்மேன் தம்பி உங்க வீட்டுக்கு தான் போய்கிட்டு இருக்கேன் உங்களுக்கு தபால் வந்து இருக்கு இந்தாங்க என்று ஒரு பார்சலை கொடுத்தார். அவர் பையில் இருந்து பார்சல் எடுக்கும் போதே அது இந்த புத்தகம் தான் என்று யூகித்து விட்டேன்.


என்ன ஒரு ஆச்சரியம் நான் கேட்டிருந்த கடவுளின் கைபேசி எண் என்கின்ற புத்தகம் மட்டுமல்லாது அவர் எழுதிய இன்னும் இரண்டு புத்தகங்களையும் சேர்த்து அனுப்பி இருந்தார்.





இரட்டை கரு முட்டை:
தமிழ் இலக்கிய சூழலுக்குள் நான் இதுவரை வாசிக்காத ஒரு எழுத்து என்றால் அது இதுதான் எனக்கு முற்றிலும் ஒரு புதிய மொழியாடலாக இது அமைந்திருந்தது. ஒரு கவிதை அல்லது ஒரு பாடல் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு கருப்பொருள் என்று ஏதேனும் ஒன்று இருக்கும் அல்லவா அந்த பொருளை இரண்டு வெவ்வேறு வடிவங்களாக இரண்டு வெவ்வேறு தன்மைகளில் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நம்முன்னே எழுத்தின் மூலம் நிலைநிறுத்திக் காட்ட எழுத்தாளர் முயன்று இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை இது இப்படி வாசிக்கக் கூடாது என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் இது என்னுடைய சிந்தனையின் அளவிற்கு இப்படி வைத்து கொள்வோம் இந்த ரசனை எனக்கு அழகாக படுகிறது என்றுதான் நான் சொல்லுவேன். இந்த கவிதைத் தொகுப்பை வாசிப்பது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது.


சுரோடிங்கரின் பூனை:
மிகப் பெரிய உளவியல் தத்துவமான இந்த ஒரு விஷயத்தை தலைப்பாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்கிறது... அவை பேசுகின்ற கருத்து களம் மற்றும் கருப்பொருள்கள் போன்றவை பலகாலமாக இதுதான் இது இப்படித்தான் என்று நமக்கு தீர்மானமாக நம் கண் முன்னால் எழுதப்பட்ட ஒரு விஷயத்தில் முன் பக்கமும் பின் பக்கமும் அலசி ஆராய்வது போன்ற இருவேறு நிலைகளில் ஒரே விஷயத்தை அணுகுவதற்கு அல்லது அணுகுவதை பற்றி அறிவதற்கு இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கிறது. 


கடவுளின் கைபேசி எண்:
இந்த புத்தகம் நான் வாசிப்பதற்கு முன்பாகவே என் நண்பன் ஒருவன் இந்த தலைப்பின் பால் ஈர்க்கப்பட்டு எடுத்துச் சென்றுவிட்டான் விரைவில் அவரிடமிருந்து வாங்கி வாசித்து தனியாக ஒரு சிறப்பு கட்டுரை எழுத வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.


அன்பிற்கினிய எழுத்தாளர் பா மரக் கவி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் மிகத் தாமதமாக இத்தகைய ஒரு கட்டுரை எழுதுவதற்கு என்னை நீங்கள் முதலில் மன்னித்தருள வேண்டும். புத்தகங்கள் கைக்கு கிடைத்த உடனேயே நான் வாசித்து விட்டேன் ஆனால் அதை பற்றி எந்தவிதமான எழுத்து பதிவும் செய்துவிட முடியாத நிலைக்கு காலமும் சூழலும் எடுத்துச் சென்றுவிட்டது. 


இதை வெறும் மன்னிப்புக் கோரும் கடிதமாக மட்டும் எடுத்துக்கொண்டால் கூட போதும்... உங்கள் படைப்புகளின் பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. மீண்டும் உங்கள் படைப்புகளைப் பற்றி நான் ஏதேனும் எழுதவோ அல்லது வீடியோ பதிவாக செய்யவோ கூடும்... ஆனால் அவை எப்பொழுது நிகழும் என்று தான் தெரியாது நம்முடைய கேள்விகள் வேண்டுமானால் ஒரு ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கலாம் ஆனால் இந்த காலத்தின் பதில் நிச்சயம் ஆழமானதாக இருக்கும்.


எழுத்து மற்றும் வாசிப்பு உலகில் சில புதிய திறப்புகளை என்னுள் உருவாக்கிக் கொள்வதற்கு மிகப்பெரும் உதவியை நீங்கள் செய்திருக்கிறீர்கள் அதற்காக நான் என்றும் மனப்பூர்வமான நன்றியோடு இருப்பேன் அந்த நன்றியை புத்தகங்கள் மற்றும் எழுத்துக்களின் மூலமாக ஏதேனும் ஒருவிதத்தில் இயங்கி நான் வெளிப்படுத்துவேன் அந்த திறப்பானது இந்த பிரபஞ்சத்தில் நம்மைப்போன்ற அத்துணை கலைசார்ந்த நண்பர்களின் வாழ்வில் ஏதோ ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தையும் ஒரு சிறு மகிழ்வையும் உண்டாகட்டும் என்று இந்த கடிதத்தை / கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

- ஜக்கு
27/2/2019

Comments

  1. மிகுந்த மகிழ்ச்சி. நண்பரே. தங்கள் பதிவு மனதிற்கு இதமளிக்கிறது.

    ReplyDelete
  2. மிகுந்த மகிழ்ச்சி. நண்பரே. தங்கள் பதிவு மனதிற்கு இதமளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?