தெரு விளக்கு



இரவு 10.15 மணி... ஒற்றை வழித் தெரு... முன்னால் மட்டுமே விளக்கு தெருவினுள் அடர் இருள்... தன் சகோதரன் உறங்கிய பின் அவனது கிரிக்கெட் மட்டையை யாருமறியாமல் எடுத்து வந்து எலிகாப்டர் சாட் அடித்துக்கொண்டிருந்த சிறு பெண்ணிற்கு சற்று நேரம் ஸ்பீட் பவ்லிங் போட்டுகொண்டிருந்தது சுவரொட்டிகள் இல்லாத சுவர்... 

சற்று நேரத்திற்கு முன் காஃபி குடித்துவிட்டு கண்மூடி அமர்ந்திருக்கையில் நேற்று வ.உ.சி பூங்கா சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் கண்ட மேற்சொன்ன காட்சி நினைவில் நிழலாடியது. 

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதிக்கு மட்டும் விதிவிலக்கே இல்லையோ என்றிருந்தேன்... இதோ நானிருக்கிறேன் என ஓடி வந்து நிற்கிறது முரண். 


பூங்காவை விட்டு வரும்முன் போட்டோவுக்காக எந்த தெருவிளக்கு ஒளியில் குளித்தேனோ அதேபோன்றதொரு தெருவிளக்கின் கீழ் தான் அந்தப்பெண் குழந்தையின் மட்டைப்பந்து காட்சி... தெருவிளக்கு ஸ்டேடியம் விளக்காக மாறவேண்டும் என்கிற கனவோடு.

- ஜெகா

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?