காற்றோவியம்



பொதுவா புதுசா ஏதாவது செய்யுறவங்கள மீட் பண்ணா அவங்க என்ன பண்றாங்க? எப்படி பண்றாங்க’ன்னு கூட இருந்து பாக்கணும்’ன்னு ஒரு ஆர்வம் வருமில்லையா?


ஜஸ்வின் அண்ணாவுடனான சந்திப்பு அப்படியான ஒரு நிகழ்வுதான். ஜஸ்வின் அண்ணா ஒரு ஒளி ஓவியர் (Light Painting Photographer) நானும் அவரும் மாத்தி மாத்தி எங்க கிரியேட்டிவிட்டிய பகிர்ந்துட்டு இருந்தோம். அதுல அவரோட படைப்புகள்ல ரெக்கை விரிக்கிறது போல ஒரு ஒளி ஓவியம் பார்த்து, அண்ணா எனக்கும் விங்க்ஸ் வச்சு ஒன்னு பண்ணுவோமா என்றேன். கட்டாயம்டா லெட்ஸ் ஃபிக்ஸ் எ டேட்... எனச்சொல்லி கிளம்பிட்டாரு.


அதுக்கப்பறம் தொடர்ந்து வாட்சப்பில் கலந்துரையாடி செவ்வாய் கிழமை செலெக்ட் செய்யப்பட்டு அதுவும் விட்டு பின் புதன் (20/04/2016) மாலை நடந்தேறியது அந்த ஒளி ஓவிய நிகழ்வு.


பெரிய செட்டப் அது இது என அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை வெட்ட வெளி கும்மிருட்டு கொஞ்சம் வண்ண விளக்குகள் கேமரா போதும். மெயின் கேரக்டரை சுற்றி கற்பனையில் ஒருமுறை வரைந்து பார்த்துவிட்டு அடுத்தடுத்து கிளிக்குகள் தான்... ஒரு சாட் இரண்டு முதல் இன்னும் சில நிமிடங்கள் நீடிக்கும் அவ்வளவே அடுத்தகணம் காமராவில் ஓவியம் ரெடியாகி இருக்கும்.


அன்று பவுர்ணமிக்கு முந்தைய நாள் அதனால் கும்மிருட்டு கிடைக்கவில்லை ஆயினும் எங்களது எண்ண ஓட்டத்தில் சிக்கிய கான்செப்ட்டுகள் சாத்தியம் என்று கண்கூடாக கண்டதில் அதீத சந்தோசம்.

ஜஸ்வின் அண்ணா பற்றி மேலும் அறிந்துகொள்ள Murugaraj Lakshmanan அண்ணா எழுதியhttp://www.dinamalar.com/supplementary_detail.asp… இந்தக்கட்டுரைய வாசிங்க.























Dear Jeswin Rebello anna very happy to be in your angels series :)

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?