தேடல்





வாழ்வென்ற பயணத்தின் பொழுதுகள் யாவும் உன்னோடே கழிகின்றன என் கனவுகளில் மட்டும்!!
நிறைந்திருக்கும் நினைவுகளூடே தொலைந்துபோன என்னைக் காண உன்னைத் தேடி ஒரு பயணம் !!
மின்னும் இருள்!
ஒளியில்லா வெளிச்சம்!
ஓ'வென்று இரையும் நிசப்தம்!
செவிப்பரைகளை சேறா பேரிறைச்சல்!
தலை முட்டும் விண் !, தரை தட்டா மண் , என தலைகீழாய் மாறிப்போனது என் உலகம்...

இமைமூடா தருனங்களில் உன் நினைவுகளே என் சுவாசம் ,!!
அவை அடைத்துக்கொண்ட போது கனவுகல் யாவும் உண் வசம் ...
காதலிப்பவன் காத்திருத்தல் அவசியம் , நானும் காத்திருக்கிறேன்!
காதலனாக அல்ல கவிஞனாக!!
என் கவிதைகள் மீது எனக்கே சிறிது பொறாமை ,
நான் உன்னிடம் சொல்லத் தயங்கும் காதலை அவை அப்பட்டமாக்கி விடுகின்றனவே ,

என்னை நேசிக்காவிடினும் என் கவிதைகளை நீ நிச்சயம் நேசிப்பாய் ,
என் கவிதை சேய் எனில் நீ அதன் தாய் அன்றோ?

தேடல் தொடங்கிய இடம் அறியேன், முடியும் தருனமும் நான் அறியேன்,
ஆயுள் முழுதும் என்னை தேடிக்கொண்டிருக்கவே ஆசை அன்பே உன்னோடு சேர்ந்து. ,
நான் உன்னுல் தொலைந்துவிட்டேன் என்பதை விட, நீ என்னை திருடி விட்டாய் என்பதே மெய்யாகும்!!

நாணிச்சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாக்க...
இதழோடு சேர்ந்து இதயமும் காத்திருக்கிறது..

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

பயனுள்ள இணைய தளங்கள்