ஓ'வென

நண்பர்களுடன் சிறிது அரட்டை...
அம்மாவுடன் சின்ன சின்ன சண்டைகள்...
அலுவலகத்தின் கலந்துரையாடல்...
அடுத்தவர்களுக்கு அறிவுரை... 
அறிவு சார்ந்த வாசிப்பு...
ஆய்வுகளுக்கான திட்டமிடல்..

என சாதரணமாகவே இருந்த போதிலும் 

ஓ'வென அழுதுகொண்டிருந்த 
உள்மனதின் பேரிரைச்சல்
உலகறியும் என்ற
அவசியம் ஏதுமில்லை

புத்தகங்களில் புதைந்து
மீண்டு வருகையில்
எத்தனையோ விஷயங்களை
மறந்ததுண்டு...
உன் நினைவுகள் மட்டும் விதிவிலக்கு.

விவாதங்கள் இல்லை
வீண் சண்டைகள் இல்லை..
ஆனாலும் நம்மிடையே
ஏன் இந்த பிரிவு..

கேள்விகள் கேட்பது எளிது...
நான் கேட்டுவிட்டேன்
இனி காலம்
பதில் சொல்லட்டும்.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?