மழை...!
அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன், எங்கப்பா தான் என்ன பள்ளில விட்டுட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு.
அன்றைய நாள் வங்ககடல்ல இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழக கரையோரம் கரைய கடந்தபடியால ஊரெங்கும் பரவலா மழை.
காலைமுதலே கருக்கலா இருந்த வானம் மதியப்பொழுதுல எல்லாம் இருட்டியே விட்ருச்சு, வகுப்புகள் நடக்கல, மைதானதுக்குபோக பயமா இருந்துச்சு.
பள்ளிக்கு நேர் மேலே இதோ இந்தக்கணம் அத்தனை மழையையும் கொட்டி விடுவது போன்று திரண்டிருந்தன மேகமே விழுந்தாலும் ஆச்சரியமில்லை,
ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்டனர், வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களின் பெற்றோர் போன் செய்து வரவழைக்கப்பட்டனர். அப்பாவும் வந்தார் அதை நான் என் வகுப்பின் ஜன்னல்வழி பார்த்தேன்,
அப்பா என் வகுப்பை நெருங்கிய நொடி பெரும் இடியொன்று அணுவேடிப்பின் சத்தத்திற்கு ஒப்பான சத்தத்தோடு இடித்ததும் கொட்டத்துவங்கியது மழை.
மழை கொஞ்சம் ஸ்லோவாகும் போய்விடலாம் என ஒன்னேகால் மணிநேரம் கடந்தும் மழையின் பொழிதலில் எந்த மாற்றமும் இல்லை பேரிரைச்சலோடும், பெருங்கொண்ட காற்றின் சத்தத்தோடும் தட்டியெடுத்தது மழை.
இரண்டு நாள் தீராது கொட்டும்மழை என உணர்ந்த அப்பா ''நனைஞ்சாலும் பரவால்ல பத்துநிமிசத்துல வீட்டுக்கு போயிறலாம் சரியா?'' என்றபடி வண்டி எடுத்தார்.
விரைந்து வீடு சென்றுவிடவேண்டும் என்றுதான் அப்பா நினைத்தார் ஆனால் இயற்க்கை வேறு திட்டம் வைத்திருந்தது, பத்தடி தொலைவில் என்ன இருக்கிறது என தெரியாத அளவில் அடர்த்தியான மழை,
முழுதும் நனைந்தாயிற்று இனி விரைந்து என்ன பயன்? அப்பாவும், நானும் மழையை ரசிக்க துவங்கிவிட்டோம், அந்த வழித்தடத்தில் பயணித்த ஐந்து ஆண்டுகளில் அது மறக்க முடியாத நாள் அன்று அப்பா நிறையா பேசினார் மழையை அனுபவித்து ரசித்து சிரித்தோம்.
1999ஆம் ஆண்டு ரஹ்மானின் இசையில் வெளிவந்த சங்கமம் படத்தின் மழைத்துளி மழைத்துளி பாடலின்
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு
மகனே வா…
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது
அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…
காற்றுக்கு ஓய்வென்பதேது…அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது…
கிடையாது ..கிடையாது
வரிகளை கேட்க்கும் போதெல்லாம் அந்த மழை நாள் என் மண்டைக்குள் வந்து மாயாஜாலங்கள் செய்ய துவங்கிவிடும்
அவர் சொல்லிகொடுத்தவை
• நேர்மை,
• சுயமரியாதை,
• கண்ணியம்
• சுயமாக சிந்திப்பது
• ருசி பார்க்காது சாப்பிடுவது
• விடாமுயற்சி
அவரை பார்த்து நான் கற்றுகொண்டது
• அர்த்தமுள்ள கோவம்,
• நேரம் தவறாமை,
• செய்வதை திருந்தச் செய்தல் ,
• கால மேம்பாடு,
• மனக்கணிதம்
ராணி காமிக்ஸ் முதல் சுட்டிவிகடன் என வளர்ந்து ரஜினி கமல் இளையராஜா இசைப்புயல் என அப்பா அடையாளம் காட்டியவைதான் எல்லாமே...
இதை எழுத காரணமா இருக்குற அந்த மழைக்கும் அதை குடுத்த அந்த இயற்கைக்கும் மனமார்ந்த நன்றிகள்...
-வெ.கி.ஜெகதீஷ்

Comments
Post a Comment