நானும் நாகராஜும்
ஊர் பேர் தெரியாத ஏதோ ஓர் சினிமா அது. அதில் யாரோ யாரையோ 'டேய் சாவுக்கிறாக்கி' என்பார் உடனே இவர் ஆமா இவர் மட்டும் தான் வாழுறகிறாக்கி பாரு என கவுன்ட்டர் அடிப்பார். நான் மிகவும் ரசித்த பல கவுன்ட்டர்களில் இதுவும் ஒன்று...
மரியாதைன்னா அது கோயம்புத்தூர் தான்பா என பலர் சொல்வதுண்டு. அப்போ மதுரை திருநெல்வேலி எல்லாம் மருவாதி இல்லாத ஊரானு எல்லாம் கேக்கபடாது இப்போ மேட்டர் அதில்ல.
கோயம்புத்தூர்ல நாகராஜ் நாகராஜ்ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மனைவி பேரு சகுந்தலா. அப்பறம் முத்து முத்தா மூனு பெண் கொழந்தைங்க கிரிஜா, வனஜா, லக்ஸ்மி .
நாகராஜ் அடிப்படைல ஒரு கால்பந்தாட்ட வீரர் மற்றும் மிகச்சிறந்த கோட்டோவியக்காரர். ஆனா அன்றைய சூழல்ல இத ரெண்டும் வச்சு புவ்வா பத்தி நெனச்சு கூட பாக்கமுடியாது அதனால பிரபல ராதாகிருஷ்ணா மில்லுக்கு போக ஆரம்பிச்சாரு. அதுக்கப்பறம் அந்த மில்லுதான் எல்லாமே... அங்க வேலை செஞ்சுதான் பொண்ணுங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணி வச்சு பேரன் பேத்தி எடுத்து மாஸ் காட்டிட்டாரு. சகுந்தலா நாகராஜ் பார்ட்னர்ஷிப் செம்ம ரெண்டு பேருக்கும் இடைல அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.
நாகராஜ் சகுந்தலாவ 'டி' போட்டு பேசி நான் பாத்தது இல்ல அவருக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு வார்த்தை. சந்தோஷம், கோபம், ஏமாற்றம்ன்னு எந்த உணர்ச்சியா இருந்தாலும் அவரு சகுந்தலாவ செல்லமா சாவுக்கிறாக்கின்னு தான் கூப்புடுவாரு அவங்க ரெண்டு பேருக்கு இடைல மட்டும் அந்த வார்ததை அவளோ அழகா இருக்கும். ஆனா சோகமா இருக்கும்போது அல்லது மனசொடைஞ்சு இருக்கும்போது சகுந்தலாவ 'சக்கு'ன்னு தான் கூப்பிடுவார்.
சக்கு என்பது சகுந்தலா வீட்டில் அவரது சகோதர சகோதரிகளால் வைக்கப்பட்ட செல்ல பெயர்.
கிட்டத்தட்ட ஒரு அறை நூற்றாண்டு நாகராஜ் மில்லில் வேலை செய்தார் என நினைக்கிறேன், அதன்பின் நிறைய சின்னசின்ன வேலைகள் செய்தார்.
சொர்க்கத்திற்க்கான பயணம் தொடங்குவதற்கு முன்னதாக சில மாதங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தார். அந்த ஓய்வுபொழுதில் அவர் சகுந்தலாவை 'சாவுக்கிறாக்கி' என சொல்லவே இல்லை.
Comments
Post a Comment