கலரு

மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களின் போதுதான் எனக்கு பெப்சி,கோலா போன்ற பண்ணாட்டு கம்பெனிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது, அதுவரை அவ்வப்போது அருந்திக்கொண்டு இருந்த நான் அதன்பின் பெரிய 'நோ' சொல்லிவிட்டேன். போராட்ட களத்தில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.

ஐ.நா வில் இந்தியாவின் நிலைப்பாடு அறிந்தபின் நாங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி பதினொரு நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த களத்தில் இறங்கினோம்.

புகைப்பட கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டு செயல்பட்டோம், பல்வேறு மாவட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்தினர், அந்த நிகழ்ச்சியில் ஒரு மேடை நாடகமும் ஏற்பாடு செய்திருந்தோம். சட்டக்கல்லூரி மாணவி தோழர் கனிமொழி எழுதி இயக்கினார்.

சர்வதேச அரசியல் எவ்வாறு பண்ணாட்டு நிறுவனங்களின் இஷ்டப்படி வளைந்து நெளிந்து உலக நாடுகளின் வளர்ச்சி, மற்றும் வீழ்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதே நாடகத்தின் ஒன் லைன். இதில் நான் கருணாநிதி வேடம் ஏற்று நடித்தேன். இது நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒருங்கிணைத்த நிகழ்வுக்கு சென்றிருந்தோம். அங்கே நிகழ்வின் இடையே மதிய உணவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வெளியே வந்தோம், மொட்டை வெயில் மண்டையை பிளந்தது, நண்பர் ஒருவருக்கு அவசரமாக தண்ணீர்  தேவைப்பட்டது, பெட்டிக்கடை  அருகே சென்று அண்ணே தண்ணி இருக்கா? என்றார் அவர் இல்லப்பா கலர் தான் இருக்கு என்றிருக்கிறார், இவரும் அவசரத்திற்கு வாங்கி வந்துவிட்டார். அவர் தன் தொண்டையை  நனைத்துவிட்டு பாட்டிலை எங்கள் பக்கம் நீட்ட ஐயோ என்று அலறினோம். நாம தான் அதை குடிக்கிறத விட்டு ரெண்டு வருஷம் ஆச்சே.

நண்பர் அதையும் தாண்டி கட்டாயப்படுத்தி அபூர்வ சகோதர்களில் ஸ்ரீவித்யாவிற்கு விஷம் ஊற்றுவார்களே அதுபோல  செய்ய குடித்த கருமம் மூக்கில் ஏறி மண்டைக்குள்  ஏதோ செய்தது. சக  நண்பர் வாயில் வைத்ததுமே நெடி தாங்காமல் துப்பிவிட்டார்.

அப்பொழுது தோன்றியது, சிலவருடங்களுக்கு முன்பு அவ்வப்போது குடித்துக்கொண்டு இருக்கையில் எதுவும் ஆகாத உடல் இப்பொழுது ஏற்றுக்கொள்ளவில்லை, இயற்கைதான் எத்தனை பெரிய அதிசயம் பாருங்களேன்.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?