சுட்டிப்பெண்ணும் சுக்குட்டீயும்
அன்றைய தினம் வர்ணங்களால் ஆனது, கோரல் டிராவையும், போட்டோசாப்பையும் தாண்டி பல வர்ணக்கலவைகளை நண்பர்கள் கலர் கோல பொடிகள் கொண்டு செய்துகொண்டு இருந்தார்கள். அவற்றை கொண்டு கோலங்களுக்கு வர்ணம் இட்டுக்கொண்டு இருந்தனர்.
கோலங்களை ரசித்தபடியும் வர்ணங்களை நண்பர்கள் மீது பூசியபடியும் நான் ஜாலி பண்ணிக்கொண்டு இருந்தேன்...
அது கோவை அருகே கருமத்தம்பட்டி உள்ளே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஒரு ஆசிரமம். 'பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்' பாட்டி தாத்தாக்களுடன், பேரன் பேத்திகள் வாழும் ஓர் அழகிய சோலை அது.
அப்பொழுது நேரம் பிற்பகலை தாண்டி போய்கொண்டிருக்க, ஒரு சுட்டிப்பெண் எல்லோருக்கும் எதையோ கொடுத்தப்படி வந்தாள், எனக்கு முன் இருந்த இரண்டு பாட்டிகள் ஆளுக்கொரு டம்ளர் எடுத்துக்கொள்ள சுட்டி என்னை தாண்டிச் சென்றால். (அப்போவே உசாரா ஆகிருக்கணும்)
சிஸ்டர் எனக்கு டீ'ன்னு நிப்பாட்டுனேன் ' முகத்த தொங்க போட்ட்டபடி (வெட்கமாம்) என் முன்ன நின்னா அந்த சுட்டி,
'அட பிளாக் டீ' என்றேன்...
'அண்ணா சுக்கு டீ' ன்னு சொல்லியபடி வேறெங்கோ பார்த்தாள்
'அச்சோ சாதா டீ வேணும் இருக்கா?' என்றேன்
இருக்கு என்ற பதிலும் இல்லை, இல்லை என்ற பதிலும் இல்லை வேணும்ன்னா இத எடுங்க இல்லாட்டி ஆள விடுங்க என்று சொல்வதுபோல தலையை நான்கு பக்கங்களும் ஆட்டினாள்
நானும் சுக்கு டீ கிளாஸ் ஒன்றை எடுத்தபடியே...
சரி அண்ணா இதையே எடுத்துக்குறேன் என்று சொல்லி தேங்க்ஸ் என்றும் சொன்னேன்.. அதற்க்கும் பதிலாக வெட்கம் மட்டுமே வந்தது.
டீ சூடாக இருந்தது தெரியாமல் 'சுர்ர்ர்' என்று உறிஞ்சினேன் சூடும், காரமும் ஒன்றாய் தாக்க திண்டாடி போனேன்...
இச்சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அந்த சுட்டியின் மௌனம் எனக்கு எதையோ சொல்லிக்கொடுத்துகொண்டே இருக்கிறது.
அன்புடன்
வெ.கி.ஜெகதீஷ்

Comments
Post a Comment