சிவ. விஜயபாரதி - கவிதைகள் 2

மாயமாகும் எண்கள்


எண்களை பெற்று
நகர்கிற பயனம்கள்,

மொபைல் தண்ணில விழுந்துருச்சு
மொபைல் மாத்திட்டேன்
நம்பர் மிஸ் ஆகிடுச்சு
இன்னொரு மொபைல்ல இருக்கு

எண்களை நீக்கிய யாரும்
இதையே சொல்லி
மீண்டும் பெறுகையில்

புரியாமலே போகிறது

வாழ்தல் நிமித்தம்.
-------------------------------------------------------------

பல்லுயிர் ஓம்புதல் 




புல்கட்டை அவிழ்த்து
மாட்டுக்குக் கொஞ்சமும்
ஆட்டுக்குக்க் கொஞ்சமும் 
கிள்ளிப் போட்டு
முந்தானை உதறி
முகம் துடைத்து
கொள்ளையில் அமர்ந்தாள்

மடியிலிருந்த 
பலகாரங்களை பிரித்து
பேரப் பிள்ளைகளுக்கு 
திண்ணக் கொடுத்தாள்
விளையாடப் போன 
பெரியவனுக்கு எடுத்து 
மறைத்துக் கொண்டு

சின்னாச்சி 
அரப்படி சுண்டுக்குள்ள 
நொய்யரிசி  இருக்கு எடுத்து
கோழிக்குஞ்சுக்கு போடுடீ – என்ற படியே
குப்பையை கூட்டி ஒதுக்க சென்ற பாட்டி
படிக்காமலே பாடம் நடத்துகிறாள் 
பல்லுயிர் ஓம்புதல்
------------------------------------------------

வெக்கை தாளா கருவேலம் பூச்சிகள் 




யாருமற்ற காதல் சாலையில் 
கைக்கோர்த்து நாடக்க  
எதிர்பட்ட ப்பட்டாம்பூச்சி
வண்ணத்தை அப்பி பறந்தது 

வெயில் உதிரும் மரநிழலில் 
தோள் சாய்ந்து நிற்க 
வியர்வையின் பிசுபிசுப்பை  
காற்று ஒற்றி எடுத்தது 

சின்னச் சின்ன சண்டைகள் தொடர
மௌனத்தின் துணையோடு 
உள்ளங்கையில் உள்ளங்கை பொத்தி 
உதடுகள் ஒட்டிக்கொண்டு 
உயிரை உறிஞ்சும்

கண்மூடி நெஞ்சுக்குள் 
முகம் புதைக்க
உஷ்ணக் காற்று 
உறைய வைக்கும் 

பயணங்களில் 
துணை தேடி 
நீளும் மனதின் வேர்கள் 

சுழன்றடிக்கும் 
காற்றின் திசையில் 
பறக்கும் இலையென 
நேர்ருங்க முடியாத  தொலைவில்
தனிப் பயனத்தில் - நீ  

உதிர்ந்தப் பூக்களை 
கால்கள் நசுக்க 
வலி சுமந்த இதயம்
நசுங்கிய பூவின் 
காம்பை பிடித்து எழுதுகிறது,

கண்ணீர் திரட்டி 
உருண்டு வாவரும் காதல் 
காலை இடறி விடுகிறது 

வெக்கை தாளா 
கருவேலம் பூசிகளின் சத்தம் 
மண்டையை பிளப்பதாய் 
பாதையெங்கும் 
மரணத்தின் வலி 

சாம்பல் போர்த்திய உடலுக்குள் 
கனன்று கொண்டிருக்கிறது 
கூடாத காதல். 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?