எல்லாம் மாயை
சுதந்திரம் என்பது வெறும் கனவல்ல...
நம்மை சுற்றி நாமே போட்டு கொண்டிருக்கும் வேலிகளை தாண்டி தேடிக்கொள்வதே ஆகும்.
Gerald Di Pego என்பவரால கதை திரைக்கதை எழுதப்பட்டு Jon Turteltaub இயக்கி வெளிவந்த படம் 'தி இன்ஸ்டின்க்ட்' (The Instinct)
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் Dr. Ethan Powell (Anthony Hopkins) ஒரு anthropologist ( அப்படியென்றால் என்ன என்பதை கூகிள்,விக்கியில் தட்டி பார்த்து கொள்ளவும்) வேற்று நாட்டு வனப்பகுதியில் சில மனிதர்களின் மரணத்திற்கு இவர் காரணம் என அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் தாய் நாட்டு அதிகாரிகள் பிணையில் சொந்த ஊர் திரும்புகிறார்.
விமான நிலையத்தில் ஒரு சிறு சலசலப்பில் அவர் சற்றே பதற்றமடைய செய்வதறியாது சிலரை தூக்கி போட்டு பந்தாடி விடுகிறார். அவர் க்ரைம் ரேட் அதிகப்படியாக உயர அதி தீவிர கடுங்காவல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அவர் அவ்விடம் இருந்து மீட்டே தீருவேன் என்று அவரை அணுகுகிறார் ஓர் மனோதத்துவ நிபுணர் Dr. Theo Caulder (Cuba Gooding, Jr) பல வருடங்களாக சக மனிதர் யாருடனும் பேசாது பழகிவிட்ட ஈத்தன் இவரிடம் மெல்ல மெல்ல பேச துவங்குகிறார். ஒரு பேரு புயலென துவங்கும் இவர்களது சந்திப்பு நாளடைவில் மென்மையான தென்றல் போல மாறி இருக்கும்.
காட்டில் தனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் ஈத்தன் முழுவதும் பகிர்ந்து கொண்டிருப்பார். தன்னை தங்களுக்குள் ஒருவனாக ஏற்றுகொண்ட கொரில்லா குடும்பம் ஒன்றுடனான தனது பயணத்தையும் அதனூடான இயற்கையின் புரிதலையும் அந்த மனோதத்துவ நிபுணரிடம் ஈத்தன் பகிர்ந்துகொண்டிருப்பார். இத்தகைய சூழலில் சிறையில் இருக்கும் சில பிழைகளை Dr. Theo சரி செய்ய முயல அது அங்கு இருக்கும் ஒரு அதிகாரிக்கு ஆத்திரத்தை தரும். அந்த கோவம் அனைத்தையும் ஈத்தன் மீது குவிய சுதந்திர கனவு கண்ட ஈத்தனை ஸ்பெஷலாக பழி தீர்த்து கொள்வார் அந்த அதிகாரி.
எல்லாம் முடிந்துவிட்டது இனி எது செய்தும் வெளி வர இயலாது என மனமொடிந்து டாக்டர் தியோ வெளியேற அடுத்த காட்சியில் ஈத்தனும் தப்பி விடுகிறார்.
கூடவே தியோவிர்க்கு வாழ்வின் தத்துவத்தை புரியவைகிறார் போலவே நமக்கும்.
-ஜெகதீஷ்

:))))))))))))
ReplyDelete