துணிச்சல் !

தனிமையில் காத்திருப்பது
ஒரு சுகம்..!
தனித்திருந்து காத்திருப்பது
ஒரு சுகம்..!

தனிமையில் காத்திருக்க
பொறுமையின் தாராளம் வேண்டும்,
தனித்திருந்து காத்திருக்க
துணிவின் ஏராளம் வேண்டும்.

பொறுமை இழந்து
துணிந்து இருக்கிறேன்...

எட்டி விடும் இடத்தில் இல்லை,

தொலைதூரத்தில் என்னவள்.

விடியும் தருணம்
விழிகள் காணும் உருவம்
எனதுயிராய் இருக்கவேண்டும் என
விழி மூடுகிறேன் !

விடியலை தேடி அல்ல...
என் துணிவின் எல்லையை தேடி...!

Comments

  1. நல்ல கவிதை. மேலும் எழுதுக.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?