கோவம்

ஒவ்வொரு உணர்வுக்கும் மதிப்பு இருக்குங்க. அந்த உணர்வு உண்மையாவும், ஆழமாவும் இருக்கும் பட்ச்சத்தில்.

எனக்கு ஐ.டி துறை மேல ஒரு கோவம் இருக்கு. இதுல உண்மை அப்படிங்கறது என்னன்னா??
கோவம் வர்றதுக்கான காரணங்கள மனசாட்சிக்கு விரோதமில்லாம ஒத்துக்கரதுதான்.

கோவத்துக்கான அடிப்படை தூண்டுதல், ஏமாற்றம், ஏக்கம், தாகம் போன்ற எதிர்பார்ப்பின் எதிர்விளைவுகள்.

குழப்பாமானா ஏற்றதாழ்வுகள் நிறைந்த இந்த கல்வி வியாபாரத்துல டிகிரி முடிக்க இஷ்டம் இல்ல. சாஃப்ட்வேர் ஃபீல்டு உள்ள போயி லட்ச்சங்கள்ள சம்பாதிக்க முடியல . இப்படிதான் என் கோவம் துவங்கிச்சு அந்த துறை மேல சுமார் ஏழு ஆண்டுக்கு முன்பு. இப்போ கோவமும் அதிகரிச்சிருக்கு, காரணங்களும் கை நிறையா இருக்கு ஆனா முதல் காரணத்த தவிர. என்னோட ஏமாற்றங்களே என் வெறுப்புக்கு காரணம்ன்னு புரிஞ்சிக்கிட்ட அந்த நொடி முதல் அந்த துறைய புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். சாஃட்வேர்ல தான் காசு கொட்டும்ங்கர மாயைய விட்டு வெளிய வந்தேன். இவளோ பெரிய பூமில பணம் ஒரு போருட்டில்லன்னு தெளிவாகிட்டேன்
இதெல்லாம் நடந்து நாலு வருஷம் ஆச்சு.

என்னான்னே தெரில கடுப்பா இருக்கு என்று கோபம்கொள்வோர் அந்த உணர்வின் மதிப்பை குறைக்கின்றீர் !

கோபம் ஓர் அழகான உணர்வு.

உங்க உணர்வுகளுக்கு நீங்க உண்மையா இருங்க.
அடுத்தவங்க தானா உங்க உணர்வுகள மதிப்பாங்க.

மீண்டும் வேறொரு உணர்வுடன் சந்திப்போம்.

-ஜெகதீஷ் - (24/06/2014) - கண்ணதாசன் பிறந்தநாள்.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?