சாகச மாலை

அது ஒரு அழகான நாள் எப்பவும் போல, அலுவல் பணிகள் முடிச்சு கொஞ்சமா படிச்சு, நிறையா பேசி, நானும் நண்பன் சிவாவும் நிறையா பகிர்ந்துகிட்டு இருந்தோம்...  நேரம் போனதே தெரியல அந்த நாள் மாலை பொழுது இன்னும் சில நண்பர்கள சந்திக்க பூங்கா போக திட்டமாயிருந்தோம் . அது விடுமுறை நாள் இல்லை என்பதால் எனக்கு வழமையாக வரும் ஆட்டோ,டாக்சி அண்ணன்கள் பள்ளி சவாரி சென்று விட்டார்கள், என்ன செய்வது என தெரியாமல் குழம்ப, ராகுல் "என்ன இன்னும் கிளம்பலையா?"  என்றபடியே உள்ளே வந்தார்.

"பை வாக்லையே போய்டுவோமா" என நான் கேட்டதுதான் தாமதம் டமால் டிமில் என ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்தன

வீல் சேரில் ஏறி வெளியே மெயின் கேட்டை அடைந்த போது முன் வீட்டு மாமா எதிர்பட்டார் "கிளம்பியாச்சா என கேட்டார் "பார்க் வரைக்கும் அங்கிள் என்றேன் " பார்த்து போப்பா என அவர் சொல்லி முடிக்கும் முன்பே ராகுல் விளையாட்டை துவக்கிவிட்டார், வீல் சேரில் ஏறும்போது யோசித்தேன் விசித்திரமான பயணமாக இருக்கும் என ஆனால் வீரமான பயணமாகவும் இருந்தத.

சந்து, கட் ரோடெல்லாம் தாண்டி மெயின் ரோட்ட அடையறதுக்குள்ள எங்களோட இந்த பயணத்த ஊரே ரசிச்சுது... நான்,ராகுல்,சிவா மூனு பேரும் பயங்கர ஜாலியா  பேசி சிரிச்சுட்டு வந்தோம், திடீர்ன்னு ராகுல்க்கு போன்வரும் என் சேர விட்டு அவருபாட்டுக்கும் போன் பேச ஆரம்பிச்சுடுவாரு நானும் வீல் சேரும் கண்ட்ரோல் இல்லாம போவோம் சிவா டேய் டேய்ன்னு  பதறி முடிக்கறதுக்குள்ள ராகுல் ரிட்டர்ன் ஆய்டுவாப்ள.

இப்படியே அதிரடியா பூங்காவ அடைஞ்சோம்.

அங்க எங்களுக்காக காத்திருந்த நண்பர்கள் கூட சேர்ந்து பூங்கவ ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு பொம்மை ரயில் எரி ஒரு ரவுன்ட்ன்னு சொல்லி அஞ்சு ரவுண்ட் அடிச்சுட்டு கடைசி ரவுண்ட்ல ஓஓஓன்னு கத்தி எல்லாருக்கும் பீதிய கெளப்பிட்டு கீழ எறங்கி உயிரியல் பூங்கா பக்கம் போனோம்...

அங்க பாம்பு, ஆமை தவிர மத்த எல்லாத்தையும் பார்த்து பேசி பழகிட்டு வந்தோம் வாத்துங்க கூட நாங்க நடத்தின பேச்சுவார்த்தை அங்க சுத்தி இருந்த  எல்லாரையும் சிரிக்க வச்சுது..

அப்படியே மெல்ல அங்க இருந்து வெளிய வந்து சாப்பிட ஆரம்பிச்சோம்
கடலை,மாங்காய் ,சில்லிகோபி,குல்பி ஐஸ் எல்லாம் அமுக்கிட்டு மீண்டும் சாகசப்பயணம் தொடங்கியது. இம்முறை பூங்கா டூ வீடு !

அப்போவாச்சும் வெளிச்சம் இருந்துச்சு இப்போ அதுவும் இல்ல...
சாதாரன ரோடு ரைடு ரோலார் கோஸ்டர் ரைடு ஆய்டுச்சு . டிராபிக் ஜாம்லாம் கூட பண்ணோம் .

இயலாமை மனச பொருத்ததுன்னு சொல்லுவாங்க, அது உண்மைங்கரதுக்கு  இந்த பயண அனுபவம் ஓர் எடுத்துக்காட்டு

மீண்டும் மற்றுமொரு மனம் வருடும் பதிவுல சந்திப்போம்...

- ஜெகதீஷ்

Comments

  1. ஜக்கூ, உனது இந்த பயணச்சீட்டு அனுபவம் எனக்கு எனது முதல் பயண நாட்களை நினைவு கூர்ந்து பார்த்தான், அது ஒரு அறிமுக விழா என்று கூறலாம், நான் சுயமாக சில நொடிகளில் சுற்றிய வீதிகளில் இறங்கி நடந்து பார்க்க இன்று நண்பர்கள் உதவி தேவை படுகிறது! ! ஆயினும் அன்று பார்த்த முகங்களும் , அவர்களது பார்வையும் இன்று வரை மறக்க வில்லை. .However trip down the road will give faces to catch ...hope you enjoyed pretty much lovely faces. .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?