வாக்குச் சீட்டு கவிதை - இரா. நளினி
வாக்குச் சீட்டே வாழ்க்கைச் சீட்டு
வாழும் நமக்கே ஓட்டுச் சீட்டு
ஒழுக்கமும் உண்மையும் உள்ளோர் தம்மை
ஒருங்கே சேர்வது நல்லோர் கடமை
அன்றே ஒளவை நன்றே சொன்னார்
நாக்குச் சொன்ன வாக்கைக் காக்க
தாயை விற்றால் பாவம் இல்லை
குடிசை வாசலில் நின்றே இன்று
கும்பிடு போடும் அரசியல் வாதி
வாக்குச் சீட்டை வாங்கிய பின்பு
வங்கிக் கணக்கோ வானம் எட்டும்
ஆயிரம் பொய்யை அழகாய் சொல்லும்
ஆளைமயக்கும் போக்கிரி கும்பல்
வாய்மையில் வாழும் மனிதரைத் தேர்ந்து
ஓட்டைப் போட்டு நாட்டைக்காப்பீர்
- இரா. நளினி
Comments
Post a Comment