‪அஹம் பிரம்மாஸ்மி‬

ஒரு குறிப்பிட்ட மதத்த சேர்ந்த முகநூல் குரூப்போட காப்சன்


'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.'

உஸ்ஸ்ஸ்ஸ் இவீக தான் நல்லவங்களாம் நாமெல்லாம் கேட்டவன்கலாம்.. ‪#‎இத‬ நான் சொல்லல அந்த குரூப் கிட்டத்தட்ட இருபதாயிரத்து சொச்சம் மக்கள் இருக்கற அந்த ஏறக்கொறைய எல்லாப்போஸ்டுமே இப்படிதான்.


சரி இப்போ ஒரு குட்டி ஆய்வு.


உலகில் அதிகமானோர் பின்பற்றும் மதங்களின் பட்டியலில் கிரிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு அடுத்து, மூன்றாம் இடத்தை, No Religious (எந்த மதத்தையும் சாராதவர்கள்) பிடித்துள்ளனர்.


2010ம் ஆண்டிலிருந்தான தரவுகளை கொண்டு, Pew Forum எனும் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில், உலகில் அதிகமானோர் பின்பற்றும் மதமாக கிரிஸ்தவ மதமும், அதற்கடுத்ததாக இஸ்லாமிய மதமும் இடம்பிடித்துள்ளன.


மூன்றாவதாக No Religious குழுவினரும், நான்காவது இடத்தை இந்து சமயமும் பிடித்துள்ளன. இதில் உலகில் இந்து சமயத்தை பின்பற்றுபவர்களில், 94 % வீதமானோர் இந்தியாவில் மட்டுமே இருப்பது இங்கு ஆச்சரியமான தகவல்.


எனினும் உலகின் மொத்த சனத்தொகையில் 84% வீதமானோர் (6.9 பில்லியன் பேர்) ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதாக குறித்த ஃபோரம் அமைப்பு அறிவித்துள்ளது.


எந்த மதத்தையும் சாராதவர்கள் குழுவினர், அவர்களது மூதாதையர்களின் சில மத நம்பிக்கைகளை மட்டும் அனுஷ்டிக்கின்றனர். (http://www.4tamilmedia.com/newses/world/10534-2012-12-20-14-12-07)


‪#‎ஒன்னும்‬ பெருசா சொல்லப்போறது இல்ல... தெய்வத்திர்கான தேடலின் தோற்றமே மதம் எனில் ... ஒரே அலைவரிசையில் என்னோடு இயங்கும் என் நண்பர்களே தெய்வம் நாங்களே தெய்வங்கள்




‪#‎அஹம்_பிரம்மாஸ்மி‬

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?