நம்பிக்கை
வணக்கம் கீச்சுலக மக்களே.
இது ஒரு புது விதமான பதிவு , மொதல்ல தொடரச்சியா எல்லா நிகழ்வுகளுக்கும் நிதியுதவி செய்து வரும் அனைத்து தெய்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .
இந்தப்பயணம் ஒரு வித்தியாசமான தருணத்துல தொடங்கிச்சு.. நான் இப்போ இருக்கிற பகுதிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆச்சு. வந்த அடுத்த நாளே எங்க ஏரியா கடைசில ஒரு ஆசிரமம் இருக்குன்னு சொன்னாங்க அப்போ இருந்தே அங்க போகனும் போகனும்ன்னு யோசிச்சு தள்ளிபோய்கிட்டே இருந்துச்சு. (இயலாமை வேற என்னத்த சொல்ல)
நம்ம பகுதில மக்களுக்காக மக்களே ஒரு நலச்சங்கம் ஒன்னு உருவாக்கி இருந்தாங்க அதன்படி சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது அந்த கொண்டாட்டங்களின் போதுதான் நான் முதல்முறையா அந்த கொழந்தைகள பாத்தேன் ஆசிரியர்கள் கிட்ட பேசினேன் அவங்க சூழல உள்வாங்கி நிறைய யோசிச்சேன்
நான் ஹோம்ககு வரலாமா என் ஃபரென்ட்ஸ் கூட
கொஞ்சம் தயக்கத்தோட தான் கேட்டேன்
நாங்க சுப்பீரியர் கிட்ட கேட்டு சொல்றோம்னனு சொன்னாங்க
அதுக்கப்பறம் கொஞ்சநாள் தொடர்பே இல்ல . ஒருநாள் நான் எங்கையோ போறதுக்காக கிளம்பிட்டிருந்தேன் அப்போ என்னோட ரெகுலர் ஆட்டோ ரிப்பேர் ஆகி அவுட்டிங் கேன்சல் ஆச்சு. திடீர்னனு பாட்டி 'சரி கிளம்பினது கிளம்பியாச்சு பக்கத்துல எங்கேயாவது போலாம்'ன்னு. என் வீல் சேர ரோட்ல(?) இறக்கி மெதுவா தள்ள ஆரம்பிச்சாங்க
எங்க பாட்டி போறோம்னேன்...
நம்ம வீட்டு ரோடு கடைசில ஒரு கோவில் இருக்கு அங்க போகலாம்ன்னு சொல்லிக்கிட்டே. அதோ அந்த வீட்டுல செடி பாரு இந்த வீட்டுல மரம் பாருன்னு அவங்களும் ரசிச்சு என்னையும் ரசிக்க வச்சிட்டே வந்தாங்க.
அப்படியே சில நிமிட பயணத்துல கோவில் கிட்ட நெருங்கிட்டோம். அங்க அந்த ஹோம் கொழந்தைகளுக்கு பஜனை பாட்டு கிளாஸ் நடந்துட்டு இருந்துச்சு படிக்கட்டு ஏறி போகமுடியாதா அதனால வெளியவே நின்னுட்டேன் ஆனா அந்த பசங்க என்ன பாத்ததும் ஜெகதீஷ் அண்ணான்னு ஓடி வந்துட்டாங்க. பஜனை சொல்லிகுடுத்த அம்மாவும் வெளியே வந்து எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டு கலைஞ்சு போய்ட்டோம் .
அந்த அம்மா ஒரு பிரபல NGO (?) கிட்ட பேசி இந்த ஹோம்க்கு நாப்பது பாய் வாங்கிகுடுக்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க
அப்போ நானும் போனேன் , வந்தாங்க பாய் குடுத்து பக்கத்துல நின்னு போட்டோ எடுத்தாங்க பஜ்ஜி சாப்ட்டு போய்ட்டே இருந்தாங்க
அவங்க போனதுக்கு அப்புறம் நான் அங்க அந்த பசங்களோட கொஞ்சம் நேரம் அங்க என்னலாம் இருக்கு என்னவெல்லாம் இல்ல ஒன்னொன்னா கவனிச்சேன் அப்போதான் அங்க சேர் இல்லாதது தெரிய வந்தது
ஒரு பத்து சேர் கிடைச்சா போதுமானேன்
அவங்க என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சாங்க
இப்போ என்னால அவளோதாங்க முடியும்னேன்
அய்யோ அண்ணா இதே ரோம்ப பெரிய ஹெல்ப் அண்ணான்னு அங்க இருந்த ஒரு சிஸ்டர் பதற ஆரம்பிச்சிடாங்க
வீட்டுக்கு வந்த உடனே டிவீட் போட்டேன் நாலு நாள்ள காசு சேந்துச்சு. சேர் கடைய தேடி ஒரு மூனு நாள் சுத்தி அதுவும் நல்லபடியா அமைய கிடைச்ச 4500₹ல 4100₹க்கு சேர் வாங்கிட்டு மிச்ச காச சேர டெலிவர் பண்ண ட்ரைவர் அண்ணாக்கு குடுத்துட்டு வந்தேன்
அதுக்கப்பறம் இதை தொடர்ந்து இப்போ வரைக்கும் ட்வீட்டர் மக்கள் எனக்கு மாஸ் சப்போர்ட்
நெகிழ்ச்சியோட பதிவு முடிச்சுக்கிறேன்
நன்றி வணக்கம் .

பாராட்டுகள் சகோதரா, உன்னால் முடியும் தம்பி
ReplyDelete