முதல் நாள்
வணக்கம் மக்களே..
இது இவ்வாண்டில் நான் எழுதும் முதல் வலைப்பதிவு
கடந்த ஆண்டு துவக்கம் முதலே அதிரடியா போச்சுங்க
பிப்ரவரி முதல் எனது சமூக பயணம் தொடங்கி இன்னிக்கும் தொடர்ந்து போய்கிட்டு இருக்கு..
பல விசயங்கள் பல ஆதரவுகள்
ஈடு இணை இல்லா இணைய சொந்தங்களுக்கு கோடி நன்றிகள் .
திறமைக்கேற்ற வேலை அதற்கேற்ப ஊதியம் புதிய பொறுப்புகள் என அதிரடி மாற்றங்கள் .
செயல் மட்டும் அல்லாமல் எண்ணத்திலும் என் சிந்தனை சற்று தொலைநோக்குடன் இருக்கும்படி பாரத்துக்கொண்டேன்.
நண்பர் செந்தில் மூலமாக பிரஷாந்தின் அறிமுகமும் அவர் மூலமாக இன்னும் சில அதிஅற்புத நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாக நம்மாழ்வார் ஐயாவுடன் இருந்தது கடந்த ஆண்டின் மிக சந்தோஷமான தருணம் அதே ஆண்டில் மிகப்பெரும் சோகமும் ஐயாவின் இ(ற)ழப்பு .
கடந்த சில மாதங்களாக நான் எழுதுவது அடியோடு குறைந்துள்ளது இன்று எழுதியே ஆக வேண்டும் என எழுதிக்கொண்டிருக்கிறேன்...
இவ்வாண்டு நிறைய எழுத திட்டம் எண்ணற்ற அனுபவங்கள் கைவசம் உள்ளன கூடவே சோம்பேறித்தனமும்.!
உறங்கியது போதுமென்று எழுத்துக்களை எண்ணங்கள் உலுக்க ஆரம்பித்து விட்டன
தொடர்ந்து எழுதுகிறேன்
பகிர நிறைய இருக்கிறது .. !!
Comments
Post a Comment