நம்பிக்கை
வணக்கம் கீச்சுலக மக்களே. இது ஒரு புது விதமான பதிவு , மொதல்ல தொடரச்சியா எல்லா நிகழ்வுகளுக்கும் நிதியுதவி செய்து வரும் அனைத்து தெய்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் . இந்தப்பயணம் ஒரு வித்தியாசமான தருணத்துல தொடங்கிச்சு.. நான் இப்போ இருக்கிற பகுதிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆச்சு. வந்த அடுத்த நாளே எங்க ஏரியா கடைசில ஒரு ஆசிரமம் இருக்குன்னு சொன்னாங்க அப்போ இருந்தே அங்க போகனும் போகனும்ன்னு யோசிச்சு தள்ளிபோய்கிட்டே இருந்துச்சு. (இயலாமை வேற என்னத்த சொல்ல) நம்ம பகுதில மக்களுக்காக மக்களே ஒரு நலச்சங்கம் ஒன்னு உருவாக்கி இருந்தாங்க அதன்படி சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது அந்த கொண்டாட்டங்களின் போதுதான் நான் முதல்முறையா அந்த கொழந்தைகள பாத்தேன் ஆசிரியர்கள் கிட்ட பேசினேன் அவங்க சூழல உள்வாங்கி நிறைய யோசிச்சேன் நான் ஹோம்ககு வரலாமா என் ஃபரென்ட்ஸ் கூட கொஞ்சம் தயக்கத்தோட தான் கேட்டேன் நாங்க சுப்பீரியர் கிட்ட கேட்டு சொல்றோம்னனு சொன்னாங்க அதுக்கப்பறம் கொஞ்சநாள் தொடர்பே இல்ல . ஒருநாள் நான் எங்கையோ போறதுக்காக கிளம்பிட்டிருந்தேன் அப்போ என்னோட ரெகுலர் ஆட்டோ ரிப்பேர் ஆகி அவுட்டிங் கேன்...