குக்கூ
குக்கூ குழந்தைகள் வெளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அடியேன் கைப்பேசியில் எடுத்த படங்கள் இவை...
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நண்பரின் காரில் ஊத்துக்குளி நோக்கிய பயணம் இனிதே தொடங்கியது... நள்ளிரவு வாக்கில் குக்கூவை அடைந்த எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது ஆண்டுவிழாவை முன்னிட்டு குழந்தைகள் எழுதிய இயற்கை சாரந்த கட்டுரைகள் மற்றும் ஓவியங்களை அழகாக பிரித்து அடுக்கும் பணியை நானும் இன்னொரு அன்பரும் செய்ய துவங்கி முடித்தபோது உறக்கம் உச்சந்தலயை அழுத்தவே சிலமணி நேரம் உறங்கி எழுந்தோம் .
இரண்டு மாதங்களாக காத்திருந்த அந்த காலை பொழுது இதோ விடிந்து வெளியே வா வா என்று என்னை அழைக்கிறது .
அன்று மட்டும் என் விழிகள் உறக்கத்தில் இருந்து மீள எவ்வித சிரமமும் கொள்ளவில்லை , விழித்தேன் உற்சாகத்துடன் உடைமாற்றி அன்பு நண்பனை அழைக்க எனக்காக ஒரு இடத்தை தயார் செய்து சிலநொடிகளில் அவ்விடத்தில் என்னை பத்திரப்படுத்தினான் . . . பதனீர் கேழ்வரகு கொழுக்கட்டை ராகி கூழ் மற்றும் நொங்கை அடுத்தடுத்து ஆனந்தமாய் அனுபவித்தபடி இருக்க , நேசமும் அன்பும் அனைவருக்கும் எனும்படி நம்மாழ்வார் அய்யா வருகை தந்தார் ஒரு சிறு அறிமுக உறையுடன் பனை காக்கும் நடைபயணம் துவங்கியது இளைஞர்கள் குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து பல கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாலை குக்கூவில் ஒன்று கூடினர்... சிலம்பாட்டம் . . . தப்பாட்டம் . . . நாடகம் என அட்டாகாசமாய் நடந்தேறியது குக்கூவின் ஆண்டுவிழா . . .
திருவிழாவில் இருந்து வரமாட்டேன் என அழும் குழந்தை போல் என் மனம் இன்னும் அன்றைய தினத்திலேயே நின்றகொண்டிருக்கிறது . . . !!!
Comments
Post a Comment