எரியும் பனிக்காடு (Red Tea)-வாசிப்பு அனுபவம்

எழுதுவது எளிதல்ல என்ற போதிலும் வார்த்தைகளை சரியாய் அடுக்கி அலங்கரிக்கும் திறமை வளர்துகொண்டதால் என்றோ எங்கோ தொடங்கி இன்று இங்கு உங்களை பல முறை சிரிக்கவைத்தும் சிலமுறை அழவைத்தும் இருக்கிறேன். எழுத்தின் வடிவம்,பரிணாமம்,உணர்வு,உயிர் என எல்லா விசயங்களையும் தற்சமயம் கவனித்துகொண்டிருப்பதால் என் எழுத்துக்கள் ஏனோ பாரமாக தோன்றியது. வாசிப்புகளில் தொலைந்துபோன நான் ஒருவழியாக என்னை தேடி கண்டுபிடித்து வந்துவிட்டேன். இதோ மீண்டும் ஒரு மீள் பதிவு, என்னை பாதித்த நாவல் எரியும் பனிக்காடை சுற்றி 





விடுமுறை நாட்களில் நாம் சுற்றுலா திட்டமிடுகையில் நிச்சயம் அதில் மலைகளும், மலைபிரதேசங்களும் கட்டாயம் இருக்கும். மலைத்தொடர்,தூரசிகரம்,உயரவானம்,பசுமைநிறம்,குளிர் காற்று, என ரம்யமான அழகான பயணங்களில் பளிச்சென மனதில் பதிந்த காட்சிகளை இந்த நாவலில் எழுத்தினூடான பயணதில் வேறு ஒரு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடான ஒரு மலைபயனத்தில் மலைக்காடுகள்,தேயிலை தோட்டங்கள்,பள்ளத்தாக்குகள்,பசுமை சரிவுகள் என எல்லாவற்றையும் கண்டு ரசித்து மெய்மறந்த பொழுதில் சிந்திக்க மறந்ததை கடந்த இரண்டு வாரங்களாக படித்த இந்த புத்தகம் பளார்,பளார் என அறைந்து நினைவூட்டிகொண்டிருக்கிறது.

நாம் இங்கு உண்ணும் ஒரு பிடி சோற்றை விளைவிக்க அந்த விவசாயியின் குடும்பம் இரு வேலை பட்டினிகிடப்பது எத்தனை உண்மையோ, அதுபோலவே இன்று நாம் இதமாய் அருந்தும் தேநீர்-அதை விளைவிக்க இந்த மலைச்சரிவுகளில் பல உயிர்களை பலிகொடுத்ததும் உண்மை. அந்த அதி பயங்கரமான உண்மையை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் நம் இதயத்தில் சூடு வைப்பது போல் சொல்லும்.

உலக அரசியல்,பொருளாதாரம்,கல்வி போன்ற விசயங்களிலும் அன்பு,பாசம்,காதல்,காமம் போன்ற விசயங்களிலும் இந்த ஆசை,வெறி போன்றவற்றால் நிகழும் சூழ்நிலை மாற்றம் என எல்லாவற்றிலுமே இந்நாவல் ஓர் புரிதலை தருகிறது.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஏதோ ஒன்று இப்புத்தகத்தில் நிச்சயம் உள்ளது

புத்தக விவரம்.

எரியும் பனிக்காடு (Red Tea)

பி.எச்.டேனியல், தமிழில்: இரா.முருகவேள்

 வெளியீடு:  விடியல் பதிப்பகம்,  பக்கம்: 300,  PB, விலை: ரூ. 150/-

இந்த நாவலை படித்த பின் தேநீர் கோப்பையை  பார்க்கும்போது நரகக்குழி கண்ணில் தெரிவதை மறுக்கவோ,மறக்கவோ முடியவில்லை.

படிக்க புத்தகம் கொடுத்து,எழுத ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?