கொங்குநாட்டுக் கவிஞர் வெள்ளியங்காட்டானின் தமிழ்ப் பணி
படைப்பிலக்கியங்களில் படிப்போரின் மனதை எளிதாகவும் ஆழமாகவும் பற்றக்கூடியது கவிதை '' இலக்கிய படைப்பாளரின் அனுபவம் முழுவதையும் அவர் நினைத்தவாறே வெளியிடுவதற்கு மிகச் சிறந்த வாயிலாக அமைவது பாட்டேயாகும்''. ' - என்ற முனைவர் த.ஏ ஞானமூர்த்தி அவர்களின் கருத்துக்கேற்ப அமைந்தவை கவிஞர் வெள்ளியங்காட்டானின் கவிதைகளாகும்.
'' வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப் பெருக்கும் கலைப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று பதவி கொள்வார் '' என பாரதியாரும், '' கங்கையை போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் '' கவிஞனின் உள்ளம் ஆகும்.
எனவே படைப்பாளர்கள் ஆகிய எழுத்தாளர்களின் தமிழ்ப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்குடன் '' கொங்குநாட்டுக் கவிஞர்களில் '' பாரதிக்குப்பின் கவிஞன் இல்லை என்ற வாதம் தலை காட்டும் நேரத்தில் ''இதோ'' என்று எளிதில் சுட்டிக் காட்டத்தக்க வகையில் வெள்ளியங்காட்டான் அவர்கள் உயர்ந்து விளங்குகிறார் '' . புதுக்கவிதையின் தாக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் மரபுக்கவிதை நெறி பிறழாது '' மரபுப் பசுவின் மடியிலிருந்து சுரந்த பாலாகப்'' பொழிந்துள்ளார்.
இவர் கவிதைகளில் கொங்கு நாட்டு மக்களின் இயல்பு வழக்குகள், சேரிப்புற மக்களின் வாழ்வின் தாக்கம் முதலியன ஆய்வு செய்யப்பட்டால் மரபுக்கவிதையின் வீச்சும், கவிஞரின் மனப்பதிவும் தொகுத்து பெற்று பதிவு செய்யப்பட்டால் , மக்களுக்கு பயன்படும் . ஆதலால் இக்கட்டுரையில் இடம்பெறும் திரு. வெள்ளியங்காட்டானின் கவிதைகளில் கருத்து செறிவு , கிராமிய பாங்கு, சமுதாய சிந்தனைகள் மனிதனை மேம்படுத்தும் வகையில் ஆய்வு செய்ய பெற்று அவர் தம் தமிழ்ப் பணியை வெளிப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும் .
வெள்ளியங்காட்டானின் நூல்களில் கால முறைப்படி வெளிவந்தவை

- இனியகவிவண்டு - 1948
- கவிஞன் - 1967
- தாயகம் - 1974
- அறிஞன் - 1977
- தமிழன் - 1979
- பரிசு - 1982
- புரவலன் - 1984
- கவியகம் - 2005
- தலைவன் - 1990
- இருளும் ஒளியும் என்னும் குறுநாவல்கள் -
- நீதி கதைகள் - 2005
- புது வெளிச்சம் - 2006
- கவிஞனின் கடிதங்கள்
- வெள்ளியங்காட்டான் கவிதைகள்
- 22 கட்டுரைகள் தொகுப்பு
ஆகியன இவரது படைப்புகள் ஆகும் .
கோவை வட்டாரத்தில் நம்மோடு வாழ்ந்த பெரும் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள் இயற்ப்பெயர் இராமசாமி, தாயார் காவேரி அம்மாள், தந்தையார் நாராயணசாமி ஆவார். மனைவி குட்டியம்மாள். ஒரு மகனும் , இரண்டு மகள்களும் இவருக்கு மக்களாவர் . நீலகிரி மலை அடிவாரத்தில் காரமடைக்கு அருகில் ''வெள்ளியங்காடு'' என்னும் சிற்றூரில் வாழ்ந்ததால் இவர் தனக்கு வைத்துகொண்ட புனைப்பெயர் வெள்ளியங்காட்டான் என்பதாகும் , மனிதநேயமும் பகுத்தறிவும் சமதர்மும் இவரை ஆட்க்கொண்ட சிறந்த பண்புகளாகம் . 1904ஆம் ஆண்டு பிறந்து 87வது அகவையில் 1991ல் மறைந்தார். உலக தமிழ் எழுத்தாளர் வரிசையிலும் கொங்குநாட்டுக் கவிஞர்கள் வரிசையிலும் இடம் பெற்ற பெருமைக்குரியவர்.''நவஇந்தியா''
நாளிதழில் இலக்கியப் பகுதி ஆசிரியராகவும் பணியாற்றியவர் . குன்றக்குடி அடிகளாரால் மிகச்சிறந்த வள்ளுவம் வளர்க்கும் கவிஞர் என மச்சம்பாளையம் விழாவில் பாராட்டப் பெற்றவர். நமக்கும் வழி காட்டிய சான்றோர்.
Comments
Post a Comment