ஏங்குகிறேன் ஏங்குகிறேன்

பள்ளி பேருந்தின் படிக்கட்டில் பரபரத்த காலோடு அவன் காத்திருந்தான் பேருந்தின் வேகம் குறைந்து அது நிற்க ஆயத்தமானது பரபரத்த கால்கள் படிக்கட்டை இருண்டு தட்டு தட்டின...

பேருந்து நின்ற மறுகணம் குடியிருப்பு பகுதிகளில் குதித்துக்கொண்டே  சென்று வீட்டு வாசலில் அவன் ஆளுயர பையை தொப்பென வைத்து பாதம் தரையில் படாமல் பறந்தடித்து ஓடினான் பந்து விளையாட

இதை பார்த்துகொண்டிருந்த தாய்க்கு கோபம் பீரிட்டு பொங்கியது மாடியில் இருந்து இரண்டு முறை கத்தி அழைத்தால் அது காற்றோடு மட்டுமே நின்றது அவன் காதுகளுக்கு எட்ட வில்லை...

அந்தி முழுதும் சாய்ந்துவிட்டது ஆனந்தமாய் விளையாடி வந்தவனை அன்னை வாசலிலேயே எதிர்கொண்டால் கண்களாலேயே மிரட்டிய அன்னையின் கண்களை மிரட்சியுடன் தயங்கி தயங்கி எதிர்கொண்டன  அவனது கண்கள்

காரமாய் இரண்டு திட்டு , சூடாய் நான்கு ,ஐந்து அடிகள் அடுத்து தனக்கு நிகரான புத்தகப்பையை தரதரவென இழுத்துக்கொண்டு கண்களை கசக்கியபடியே உடைமாற்ற சென்றான்

முகம் கழுவும்போதே திட்டும், அடியும் பாதி மறந்திருந்தது , உடைமாற்றி முடிக்குமுன் மூத்தவனும் வந்து சேர்ந்திருந்தான்...

'அம்மா' என்று சொல்லிக்கொண்டே ஆசை ஆசையாய் வெளியில் வந்தான்

அவள் அடுப்படியில் இருந்தபடியே கேட்டால் 'என்ன'

மீண்டும் கொஞ்சியபடியே 'ம்மா' என்றான்

'என்னடா சும்மா நொய்நொய்ன்னு அண்ணன் இப்போதான் ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சுட்டு வந்திருக்கான் அவனுக்கு ஸ்நேக்ஸ் ரெடி பண்ணிட்டு வரேன் நீ போ போய் ஹோம்வொர்க் எடுத்துவை ' இம்முறை அவள் குரல்  கடுமையாக இருந்தது...

அழுதுகொண்டே எழுதிமுடித்து அப்படியே தூங்கிப்போனான்

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?