காத்திருக்கிறேன்
என்னவள் எனக்கென எழுதுகிறாள்
அவள் இதயத்தின் உணர்வுகளை விழிகளே வெளிப்படுத்திவிடும் எனும்போது
விரல்களுக்கு ஏன் இந்த வீண் வேலை
என்னை எண்ணி எழுதும்போது
எச்சரிக்கையாய் இரு
என் ஏக்கத்தால் காகிதம் எரிந்திட போகிறது
நீ எழுதும்...
இல்லை இல்லை
வரையும் கடிதத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்
காதல் சொல்ல தாமதிதாய்
கண்கள் சந்திக்க தாமதித்தாய்
கைகள் சேர தாமதித்தாய்
கடிதத்தையும் தாமதித்து விடாதே
காத்திருக்கிறேன் என் காதலை கண்களால் பருக
Comments
Post a Comment