RIP MJ
உலக இசை நாயகன்.. மைக்கேல் ஜாக்சன்!
மைக்கேல் ஜாக்சன், 29.8.1958-ல் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். 10 குழந்தைகளில் ஏழாவது பிள்ளை இவர். தந்தை ஜோசப், கண்டிப்பானவர். ''நான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு அப்பாவின் கண்டிப்பும் ஒரு காரணம்'' என்பார் ஜாக்சன்.
ஜாக்சனுக்குப் பிடித்த கதா பாத்திரம், பினாசியோ. பொய் சொன்னால் மூக்கு நீளமாகிவிடும் அந்தக் கதா பாத்திரத்தை மிகவும் நேசித்தார். பல்வேறு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்தார். அவரின் பிடித்தமான வளர்ப்புப் பிராணி, பப்புல்ஸ் எனும் சிம்பன்சி. மிஸ்டர் டிப்ஸ் என்கிற பனி ஆடு ஒன்றையும் வளர்த்துவந்தார்.
ஐந்து வயதிலேயே அண்ணன்கள் நடத்திய, 'ஜாக்சன் பிரதர்ஸ்’ இசைக் குழுவில் பாடினார். அப்போதே நன்றாக நடனம் ஆடுவார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982. இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் 'ஈடி’ படத்திற்கான ஆடியோ கோர்வையைத் தன் குரலில் பதிவு செய்தார். இதற்காக கிராமி விருது கிடைத்தது. அதே ஆண்டு வெளிவந்த 'த்ரில்லர்’ ஆல்பத்திற்காக எட்டு கிராமி விருதுகளைப் பெற்றார். இது, இது வரை யாராலும் முறியடிக்கப்படாத சாதனை.
உடல் அளவில் நிறையவே பாதிக்கப்பட்டவர் ஜாக்சன். நடனப் பயிற்சியின்போது மூக்கை உடைத்துக்கொண்டார். ஒரு நிகழ்வில் உடல் முழுக்கத் தீக்காயங்கள் ஏற்பட்டன. 'விட்டிலிகோ’ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது.
எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டினார். தன்னுடைய 'மேன் ஃப்ரம் தி சிங்கிள்’ பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்குத் தந்தார். ஏழை மக்களின் துயரங்களை நினைவுபடுத்தும் வகையில் கருப்புப் பட்டை ஒன்றை கையில் எப்போதும் அணிந்து கொண்டார்.
டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் ணிளி என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்தார். தன் வீட்டில் மிகப் பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி, பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாடச் செய்தார்.
தன் சுயசரிதையை 'மூன் வாக்கர்’ என்கிற தலைப்பில் வெளியிட்டார். அதில், கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களைச் சொல்லி இருப்பார். 1992-ல் வீல் சேரில் அமர்ந்தபடியே விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல், 'ஹீல் தி வேர்ல்டு’ (உலகின் காயத்தை ஆற்றுவோம்). இது, ஐ.நா. சபையால் உலகப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. அவரின் 'எர்த்’ என்கிற சாங், உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகாரப்பூர்வப் பாடலானது. தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்புதான்.
புவி ஈர்ப்பு விசையை மீறி, நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்ஸைத் தானே உருவாக்கினார். அதன் பேட்டன்ட்டை பதிவும் செய்துகொண்டார். இதை அணிந்துகொண்டு முன் பக்கம் சாதாரணமாக வளைவதைவிட, பல மடங்கு அதிகமாக வளைய முடிந்தது.
அமெரிக்காவின் நூலகம் ஒன்றுக்குப் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களைத் திரும்பத் தராததால், 10 லட்சம் டாலர் அபராதம் உயர்ந்தது. 'அந்த நூல்களை தங்களின் கையப்பத்தோடு திருப்பித் தந்தால் போதும்’ என அந்த நூலகம் அறிவித்தது... ரகளையான க்ளைமாக்ஸ்.
வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார். அந்தக் கடன்களைத் தீர்க்கவும் ரசிகர்களைச் சந்திக்கவும் 50 இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்தத் திட்டமிட்டார். அதற்கான பயிற்சியில் இருக்கும்போது, அதிகமாக வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டதால் உயிர் பிரிந்தது. உலகமே அந்த இசை நாயகனுக்கு கண்ணீரால் பிரியா விடை கொடுத்தது. . .
R I P MJ

Comments
Post a Comment