மடல் !!!



உன் உருவின் புறவெளியும் …!

உன் மனதின் உள் வெளியும் வெறுமையாய்…!
இல்லை இல்லை வெண்மையாய் ..!

உன் மனதை பிரதிபலிக்கும் வெண்ணிறக் காகிதம் தனில் …!

மென்மையின் உருவான மயிலிறகு கொண்டு …!
அதனினும் அழகான பொன் நிற விரல்கள் ..!
எதை எழுதுகின்றன ..?..!

என்றோ ஒன்றாய் உடனிருந்து …!
இன்று எங்கோ இருக்கும் தோழிக்கு மடலா ?..!

அல்லது தங்கையின் திருமணத்திற்கென …!
தங்கம் சேர்க்க திரை கடல் ஓடிய ..!
தமையனுக்கு மடலா ..?..!

உயர் கல்விக்கென தொலைவில் …
இருக்கும் தம்பிக்கு மடலா..?..!

உன் கண்ணில் ஏக்கம் தெரிய ...!

ஏக்கத்தின் பிரதிபலிப்பாய்…!

எழுத்துக்களை ஒரு கை வரைய …

மறு கை ஏனடி உன் கன்னத்தை தாங்குகிறது..!

காற்றோ முத்தமிட முடியாமல் ஏங்குகிறது ..!

உன் ஏக்கத்தின் மர்மம் யார் அறியார் ..!

உன் எழுத்தின் வடிவம் நான் அறியேன் ..!

உன் மாமனுக்கே தெரியட்டும் ..!
மடலின் மர்மம் ..!

மடலை மடித்து மனதோடு …
வைத்துக் கொள் ...!

அது கொண்டு சேர்க்கும் …
உன் மாமனிடம் ..!

யாரிடமேனும் அகப்பட்டால் உயிர் அறுந்து நோகும்...

-------------

At SoundCloud

https://soundcloud.com/heart-breakking-jaguu/madal


At Spreaker...

http://www.spreaker.com/user/jagu/7ezdw


On Youtube






Spl Thanks To JAMAL... 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?