புதிய முயற்சி



விரக்தியின் உச்சமான தனிமையில் நாம் என்றும் துணையாய் தேடுவது இசை...


நம் இதயத்துடிப்பின் தாளம் இசை...


சிறு பிள்ளையின் சிரிப்பு இசை...


இளம் பெண்ணின் கொலுசு இசை...


காதலின் மௌனம் இசை...


மோகத்தில் முத்த சத்தம் இசை...


செடி கொடியோடு காற்றின் காதல் இலை பேசும் இன்னிசை...


விண்ணும் மண்ணும் உறவாட மழை பாடும் மெல்லிசை...


பாடும் குயிலின் உருவம் யாரரியார் அதுபோலே இசையும்...


பிறக்கும் உயிரின் அழுகை இசை...


பிரியும் உயிரின் பேரமைதி இசை...


ரசனையின் உச்சம் இசை...


உலக இசை தின நல்வாழ்த்துக்கள்...


--------

இது உலக இசை தினத்துக்காக நான் எழுதின கவிதை , இந்த கவிதை பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை . உலக இசை தினத்தன்னிக்கு இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்லி ஆகணுமேன்னு http://www.spreaker.com/ வலைதளத்துல என் சேனல்ல பேச ஆரமிச்சேன் , ஏற்கனவே ரெண்டு மூணு நிகழ்ச்சி பண்ணியிருந்தாலும் கொஞ்சம் அதிக கால இடைவெளி விழுந்துட்டதாள வார்த்தைகள் கோர்வையா அமையல , சரி எத பேசணுமோ அத எழுதிவச்சிட்டு பேசுவோம்ன்னு எழுத ஆரம்பிச்சேன் அதுவும் சரியா வரல அப்போ வந்ததுதான் இந்த கவிதை... இந்த வரிகளுக்கு பம்பாய் திரைப்படத்தின் உயிரே பின்னணி இசை பொருத்தமா இருந்ததால ரெண்டையும் ஒண்ணா பதிவேத்தி என் சேனல்லையும், சவுண்ட் கிளவுட்லையும் அப்லோட் பண்ணி யூ டியுப் மிஸ் ஆகுதேன்னு யோசிச்சிட்டிருந்தப்போதான் விண்டோஸ் வீடியோ மேக்கர் என் கண்ணுல பட்டுச்சு . வரிகளுக்கேத்த படங்களுக்கான தேடல்ல இரண்டு மணி நேரம் செலவாச்சு அப்பறம் கிடைத்த படங்களையும் அந்த ஆடியோவையும் கரெக்க்டா ஒன்னு செக்க ஒருமணி நேரம் ஆச்சு... வீடியோ ரெடி ஆனதுமே அத யூ டியூப்லயும் போட்டதுக்கு அப்பறம் தான் ஆத்ம திருப்தி..


ஸ்பிரீக்கர் சேனலில்....

http://www.spreaker.com/user/jagu/ctfum


சவுண்ட் கிளவுடில்...

https://soundcloud.com/heart-breakking-jaguu/mfsuumtp9msp



யூ டியூபில்

கண்டும்,கேட்டும் மகிழுங்கள்...

தொடரும் இதுபோன்ற கிறுக்குத்தனங்கள்.....

லவ் யூ உலகமே...... 

Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?