அவளின் இதழ்
என் விழிகள் மொய்க்கும் மது கிண்ணம் அவளின் இதழ் !!!
பூக்களின் புன்னகை இவளின் புன்சிரிப்பில் தோற்று போகும்
மலர்களின் மகாராணி அவளின் இதழ் !!!
ஆயிரம் ஆயிரம் மொட்டுக்கள் மலர்ந்தாலும்
என்றும் உதிராது அவளின் இதழ் !!!
வருடிச்சென்ற தென்றலும் வாசம் காணாமல் வியந்துபோகும்
மலிரினும் மென்மையானது அவளின் இதழ் !!!
மௌனமாய் காதல் பேசுகையில் காதோடு கானம் பாடும் அவளின் இதழ் !!!
கோவத்தில் வார்த்தைகள் தீ என தெறித்த போதும்
குளிரினில் கதகதப்பாய் அவளின் இதழ் !!!
வானவில்லின் வண்ணமெடுத்து வான தேவதை வரைந்த ஓவியம்
அவளின் இதழ் !!!
என் கன்னங்களில் முத்தமிட்டு முத்திரை பதிக்கும் உரிமை கொண்டது
அவளின் இதழ் !!!
என் மயக்கங்களின் முகவரி அவளின் இதழ் !!!
என் உள்ளம் ஊமையாகும் தருணங்களில் எனக்காய் உரக்க பேசும் அவளின் இதழ் !!!
அந்தி சாய்ந்த பொழுதில் ஆனந்த கீதம் பாடி
அன்னையாய் அரவணைத்து
அழகாய் தாலாட்டும்...
அவளின் இதழ் !!!
காதலின் ஆணிவேரை உங்கள் கவிதைகள் மூலம் உலுக்கி விட்டீர்கள்.
ReplyDeleteநன்றி நன்றி அண்ணா :))
Delete