Hurt Locker

உலக வரலாற்றில் பெரும்பாலும் பேசப்படுவது போரை பற்றியே.. போர் இரு வேறு நாட்டு ராணுவத்துக்கு இடையே நடக்கும் ஆயுத சண்டையே போர் எனப்படுகிறது சில உள்நாட்டுப்போரும் ஆங்காங்கே நடப்பது உண்டு . போரினால் மாற்றி எழுதப்படும் வரலாறுகளில் போரை பற்றியோ . . ராணுவ வீரர்கள் பற்றியோ அவ்வளவாக ஆர்வம் காட்ட படுவதில்லை . இப்படியான ஒரு சமகாலத்தில் போர்களத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எடுக்கப்படும் திரைப்படங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.. சரி வாங்க அப்படியான ஒரு திரைப்படத்தை பத்தி பாக்கலாம்.

The Hurt Locker

2003ம் ஆண்டு  தொடங்கியதாக சொல்லப்படும்   ஈராக் போரின்போது   . 2004ம் ஆண்டு போர் வீரர்களுடன் தங்கியிருந்த ஊடகவியலாளர் மார்க் போலின் நேரடி போர்கள அனுபவங்களின் தொகுப்பே 'தி ஹர்ட் லாக்கர்' படத்தின் மூலக்கதை ஆகும் .

போர்க்களத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் குழு ஒன்றின் வீரர் ஒரு விபத்தில் இறந்துவிட அவருக்கு பதிலாக அக்குழுவில் இடம் பெறுகிறார் கதாநாயகன் 'ப்ரெயின் கெராட்டி'

ஜெராமி ரெண்னர் மற்றும் அன்டனி மேக்கி உடன் இனைந்து பணியாற்றும் ப்ரெயின் எப்பொழுதும் முரட்டு தனமாகவே நடந்து கொள்வார்.. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெராமி மேக்கி சொல்லும் எதையும் கண்டுகொள்ளாது இருப்பார்.. இருப்பினும் ஒன்றாக பணியாற்றுகையில் ராணுவத்துக்கே உண்டான மிடுக்கையும் கம்பீரத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள் இம்மூவரும்.

வீடியோகேம் விளையாடுவது , வெடிகுண்டுகளை  செயலிழக்க செய்த பின் அதன் பாகங்களை சேகரித்து வைப்பது போன்ற கிறுக்குதனங்கலோடும் , வெடிகுண்டை நெருங்கையில் கண்ணீர் புகை குண்டை வீசி கண்ணுக்கு தெரியாமல் மறைவது , வெடிகுண்டுகளை கையாளும்போது பாதுகாப்பு உபகரணங்களை கழட்டி வைத்துவிடுவது போன்ற முரட்டுத்தனமான கதாப்பாத்திரம் தான் ப்ரெயின் . . இவரது இந்த நடவடிக்கைகளை சமாளிப்பதே மற்ற இருவரின் மிக முக்கிய சவாலாகிவிடுகிறது .

131 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் எந்த இடத்திலும் அலுப்புதட்டமல் செல்கிறது. படம் முடியும் வரை நாமும் ஏதோ ஒரு போர்க்களத்தில் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. தெளிவான இயக்கம்  . விறுவிறுப்பான திரைக்கதை . அயர்ச்சி ஏற்படுத்தாத காட்சி நகர்வுகள் . அளவான பின்னணி என அனைத்து விதத்திலும் அற்புதமன படைப்பு 'ஹர்ட் லாக்கர்'



கேத்ரின் பிக்லோ என்கிற பிரபல பெண் இயக்குனர் இயக்க, பேர்ரி ஆக்ரோயிட் ஒளிப்பதிவு செய்ய அதை வெட்டி ஒட்டி எடிட் பண்ணி மெருகேத்தி இருக்காங்க கிருஷ் இன்னிஸ் மற்றும் பாப் .

2009ம் ஆண்டு உலகெங்கும் திரைக்கு வந்த இத்திரைப்படம். 82வது அகாடமி விருதுகள்ள ஆறு ஆஸ்கார் அவார்டுகள அள்ளிச்சு .

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை பெற்ற இப்படத்தின் இயக்குனர் , அகாடமி விருது பெரும் முதல் பெண் என்ற பெயரையும் தட்டி சென்றார்.


தன் உயிரை பணயம் வைத்து பெரும் வெடி விபத்துகளை தடுக்கும் இதுபோன்ற வீரர்களையும் அவர்களின் அன்றாட வாழ்வையும் பிரதிபலிக்கும்  'தி ஹர்ட் லாக்கர்' உலக சினிமா வரலாற்றின் முக்கிய பக்கங்கள்..

நன்றி .

Comments

  1. additional note: that director was a ex- wife of fabulous director James Cameron.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?