நினைவுகள் . . .


பக்கத்து வீட்ல பிரபு அண்ணா வைஷ்ணவி . . எதிர்த்த வீட்ல கிருபா. . அந்த குடியிருப்புலையே குட்டி பையன் என் நெருங்கின நண்பன் கிஷோர்.. எல்லாரு கூடையும் சேந்து இருந்த அந்த நாட்கள் நிச்சயமா பொக்கிசம்தாங்க..




அந்த மொத்த குடியிருப்புக்கும்.. இல்ல இல்ல அந்த தெருவுக்கே அலாரம் ஒன்னு இருக்குங்க கரெக்ட்டா  காலைல 7.05க்கு ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'ன்னு ஒரு சவுண்ட் அம்புட்டுதான் கும்ப கர்ணனே எந்திரிசுடுவாரு அவ்ளோ சத்தமா இருக்கும்.. அது வேற ஒன்னும் இல்ல நம்ம கிருபா அப்பாவோட வண்டி சத்தம் தான்.. ஒதைக்கும் பொது ரெண்டு டமால்' சவுண்ட் அப்பறம் ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. எவளோ தூக்கத்துல இருந்தாலும் எந்திரிச்சே தான் ஆகணும் நோ எக்ஸ்கியுஸ் ..



கிருபாவோட அம்மா வேளாண் பல்கலைகழகத்துல வேலைல இருந்தாங்க அவங்கள பேருந்து நிறுத்தத்துல விட்டுட்டு வந்து கிருபாவ பிக்கப் பண்ணிக்குவாரு இதுக்குதான் அந்த ஆல் இந்தியா அலாரம் .



நாலாவது முடிக்கறதுக்கு முன்னாடியே  அந்த ஏரியாவ விட்டு வேற ஏரியாக்கு மாற வேண்டிய கட்டாயம்.. பிரிவு அப்படிங்கற வார்த்த கூட அப்ப எனக்கு தெரியாது ஜாலியா புது வீட்டுக்கு போக ரெடி ஆயிட்டேன்..  எப்போ எப்படி கிளம்பினோம்னு  ஞாபகம் இல்ல  ஒரு சுப முகூர்த்த நாள்ல புது வீட்ல பால பொங்க வச்சோம் . . .



காந்திபுரம் சிக்னல்ல இருந்து தெற்கு பக்கமா வந்தா அதாவது பார்க் கேட் பக்கமா வந்தா மொதல்ல கண்ணுல படுறது அந்த ஏரியா காவல் நிலையம் அதுக்கு நேர் எதிர்த்த மாதிரி  இருக்கிறது 'மத்திய பேருந்து நிலையம் கோவை' அதுக்கு உள்ள வந்து அப்படியே பேருந்து நிலையத்துக்கு பின்பக்கமா வந்தா நாலு ரோடு பிரியும் இடது பக்கம் ஆட்டோ ஸ்டேன்ட் வலது பக்கம் ஒரு பங்களா இருக்கும் அந்த பங்களாக்கு பேரு கிரி பங்களா அந்த பங்களாவோட அவுட்டவுஸ் தான் நாங்க புதுசா குடியேறின வீடு..



எப்பயுமே நம்ம நினைவுகளையும் சரி வாழ்கையையும் சரி சில முக்கியமான நபர்களே அலங்கரிப்பாங்க அந்த மாதிரி சிறப்பானவங்கள நாம எப்போ சந்திச்சோம் எப்போ பிரிஞ்சோம்  எதுவுமே   ஞாபகம் இருக்காது எனக்கும் அப்படிதான் கிருபாவ எப்போ பாத்தேன் ஞாபகம் இல்ல ஆனா அவள மட்டும் என்னால மறக்க முடியல.. நினைவுகளின் இந்த பக்கம் கிருபாவுக்காக..


.
நினைவுகள் தொடரும்.. 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?