நினைவுகள் . . .


குட்டை பார்க்.. குப்புசாமி மருத்துவமனை .. மணி மேல்நிலை பள்ளி.. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்.. இது எல்லாத்தையும் விட மிக பிரபலமான ஒன்னு.. வுமன்ஸ் பாலிடெக்னிக் [மகளிர் தொழிற்கல்வி மையம்] இதெல்லாம் பாப்பநாயக்கன் பாளையம், சித்தாபுதூர் ஏரியாவின் அடையாளங்கள்.. அதுலயும் அசோகர் வீதி, ரொட்டி கடை வீதி . . மாவு மில் சந்து இதையெல்லாம் அடுத்தடுத்த  ஜென்மத்துலயும் மறக்க முடியாது..



மேல சொன்ன முக்கியமான இடங்களெல்லாம் தாண்டி.. ஒரு ரவுண்ட் டானா.. அப்பறம் இரண்டு நாலு ரோடு சந்திப்பு அப்பறம் ஒரு துர்கை அம்மன் கோவில் . . அதுக்கு ரொம்ப பக்கத்துல கபாலி மாஸ்டர் புகழ் லக்ஷ்மி பரோட்டா ஸ்டால்.. [அவ்வவ் எழுதும் போதே எச்சில் ஊருது] இதெல்லாம் தாண்டினா அட்டகாசமா கண்ணுல படும் அப்போதைய பிக் பஜார் .  .  . வேல் முருகன் ஸ்டோர் [அந்த குட்டி  ஏரியால இது கொஞ்சம் பெரிய கடைதான் பாஸ்] அதையும் கிராஸ் பண்ணி போனா வர்ற முதல் வலது கட்டுல உள்ள போறோம்.. ரோம்பலாம் போகவேண்டாம் ரைட் கட் பண்ண உடனே ஒரு பத்தடி தூரத்துல ஒடஞ்சும் ஒடயாமையும்.. சிதைஞ்சும்  சிதையாமையும் இருக்குற ஒரு கறமுர கதவு உங்கள கீறல்களுடன் இனிதே வரவேற்கும் சட்ட கிழியாம உஷாரா வர்றது உங்க சாமர்த்தியம்..



ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்து அதன் எடையை நிர்ணயிக்கபடாதாம்... [அட்டைய பாத்து எடை போட்டா என்ன? இல்ல அட்டை டு அட்டை படிச்சிட்டு எடைபோட்டா என்ன ? நமக்கு போண்டா வருதா இல்ல பொரிகடல வருதாங்குரதுதானே முக்கியம்] ஹிஹிஹி இந்த பழமொழி எதுக்கு பொருந்துமோ இல்லையோ மேல சொன்ன கதவுக்கு பொருந்தும். இடதுல ரெண்டு  வலதுல ரெண்டுன்னு அழகா அடுக்கி வச்ச அட்டைபெட்டி மாதிரி நாலு வீடு. அதை தாண்டி ஒரு பெரிய காலி இடம், அந்த காலி இடத்துக்கு வலது புறமா முன்னாடி இருக்கிறதா விட கொஞ்சம் பெரிய அளவு வீடுங்க ரெண்டு அதுக்கு எதுத்தமாதிரி தண்ணி தொட்டி. அந்த தண்ணி தொட்டிய தொட்டமாதரி ஒரு வழி தெரியும் அதுக்குள்ள போனா அடடடா செம்ம ஜாலியா இருக்கும். 5 தென்னை , ஒரு முருங்கை, புளியமரம் , வேப்பமரம் , நிறையா செடிங்க எல்லாம் நிறைஞ்சு இருக்குற எங்க சொர்க்கம் இருக்கும். 

முன்பக்கம் இருக்குற நாலு வீட்ல இடது பக்கம் இருந்த முதல் வீடுதான் எங்க வீடு. எங்களுக்கு நேர் எதிர் வீடு கிருபாவோடது. கிருபா என் முதல் தோழி .



அது 20-ம் நூற்றாண்டின் இறுதிகாலம்னு நினைக்கிறேன் . அப்போ நான் நான்காம் வகுப்பின் அரையாண்டு தேர்வு விடுமுறைல இருந்தேன்.. அப்போ குறுந்தகடு (சி.டி) அறிமுகமான காலகட்டம் கிருபா வீட்ல இருந்த சோனி கலர் டி.வில முதல்வன் படம் போட்டாங்க அதுதான் நான் சி.டில பாத்த முதல் படம். . . 

நினைவுகள் தொடரும் . . . 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?