மனிதம்
உலகின் ஒரு கோடியில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மேல் அதுவும் மிகச்சிறிய ஒரு சமூகத்தின் பொருட்டு வல்லரசு ஆன நாடுகள் முதல் வல்லரசு ஆக துடிக்கும் நாடுகள் வரை இவர்களை வைத்தே அரை நூற்றாண்டு காலம் அரசியல் நடத்தி ஆகி விட்டது. .
என்ன ஆகி விட்டது.. என்கிறீர்கள்?? அப்படியானால் எல்லாம் முடிந்து விட்டதா.. ??
ஆம்.. முடிந்துதான் விட்டது.. அனைவரையும் தான் கொன்று விட்டோமே..
அப்படியானால் எஞ்சியவர்கள்..
ஆஹா.. அவர்களெல்லாம் நாட்டை விட்டு ஓடியவர்கள்..
அவர்களில் மிஞ்சியவர்கள்..
மிஞ்சியவர்களா??? அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லையே..
அதாவது அண்டை நாடுகளுக்கோ, அயல் நாடுகளுக்கோ.. போகாதவர்கள்..
அவர்கள் அனைவரும் கைதிகள் . . .
கைதிகளா??
ஆம்.. அப்படியும் சொல்லலாம்..
ஆ... ஒன்றுமே புரியவில்லை . .
உலக அரசியல் அப்படித்தான் இருக்கும்.. பல தலைமுறை தாண்டி வந்தவர்களுக்கே இது விளங்காது..
ஆனால் நாளைய தலைமுறையினருக்கு ஏதோ பொறி தட்டி இருக்கிறது போலும்..
என்ன.. நாளைய தலைமுறையினரா..
ஆம்.. ஆம்..
ஹ.. இதில் பயப்பட என்ன இருக்கிறது.. அனைவரையும் பொசிக்கி விடுவோம் ஹ்ம்ம்..
பொசிக்கிவிட அவர்கள் ஒன்றும் பஞ்சு பொதியல்ல.. திக்கெட்டிலும் சுடர்விட்டு எரியும் அறப்போர் ஜோதி...
நமது எல்லைக்குள் நமக்கு எதிரானவர்களா..
அவர்கள் நம் எல்லையில் இல்லை..
பின்னே.. வேறு எங்கிருக்கிறார்கள்.. ஓ!! அகதிகளாய் இங்கிருந்து ஓடி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களின் வேலையா..?
இல்லை . .
அவர்கள் இல்லை எனில் வேறு யார்..
8 இளம் போராளிகள்..
எட்டு பேரா..?
அவர்கள் தங்கள் எல்லையில் இருந்து கொண்டு என்னை கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது...
அவர்கள் தங்களை நேரடியாக எதிர்க்கவில்லை . . ஆனால் அப்படியும் சொல்லலாம்..
வெறும் எட்டு பேர் என்னத்த கிழித்துவிட போகிறார்கள்..
எட்டு போராளிகளுக்கு பின்னால் உலகெங்கும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு விட்டார்கள்..
அப்படியென்றால்..
விரைவில் மறுமலர்ச்சி..
எவ்வாறு சாத்தியம்..
போரில்லா உலகில்.. ஊழலற்ற அரசியல் . .
நிச்சயமாக முடியாது..
அடித்தளம் இட்டிருப்பது இளைஞர்கள் . . எதுவும் சாத்தியமே..
Comments
Post a Comment