பெண் பூவே நீ எங்கே ???
மாலை நேரமது..
மங்கள வண்ணம் பூசி வானம் ஜொலித்தது...
மல்லிகை மலர்ந்து... மகரந்தம் வெடித்து..
காற்றெங்கும் மனம் வீசிடவே..
சுவாசத்தில் சிலிர்த்தது உயிர்..
சிந்தை முழுதும் சந்தோஷம் சற்று அதிகமாகவே இருந்த தருணம்..
சிதறிய மணிகளின் . . . சங்கீத ஒளியாய் . .
சிறிது தொலைவில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க . .
புத்தம் புது மலரொன்று , புன்னகை பூத்தபடி . . .
நடை பயில நான் கண்டேன் . .
மின்னலிடை அதன் வெள்ளி கீறல்கள் கண்ணை பறிக்க . .
மலரல்ல , மங்கை என உணர்ந்து கொண்டேன் . . .
தென்றலென தவழ்ந்தவளை தாண்டி நான் போகையிலே . . .
அவள் கேசம் வருடி . . தேகம் தீண்டிய காற்று . . .
என் நெஞ்சை நெருடிச் சென்றது . .
முதன் முதலாய் துணை ஒன்றை நாடி. . .
என் இதய்ம் அவளோடு நின்றது . .. ..
மறுமுறை உன்னை காணவே . . என் விழியும் என்னை கெஞ்சவே . .
ஒருமுறை உன்னை காணும் ஏக்கத்தில் . . .
அனுதினம் மாலையில் , அந்தி சாயும் வேளையில் . . .
நான் இங்கு காத்திருக்க . . .
பெண் பூவே நீ எங்கே பூத்திருகிறாய் . . . ???
Good Ja Gu... nice Kavithai...
ReplyDelete