காதலித்துப்பார் !!!
மெய் சிலிர்க்கும் மெல்லிய ஓசை !!
அதை மெய் மறந்து கேட்டதுண்டா ??
உயிர் உருகும் தருணம் அதை உணர்ந்ததுண்டா ??
நாம் வாழும் இந்த பூமியின் பாசம் தான் புரிந்ததுண்டா ??
மொட்டரும்பும் மெட்டுச்சத்தம் மெல்ல ரசித்து கேட்டதுண்டா ??
விரிந்த மலரின் புன்னகையில் புன்சிரிப்பின் ஓசை கேட்டதுண்டா..
புல்லின் நுனியில் தவழ்ந்து . .
மலரின் இதழில் விழுந்து...
பட்டுத்தெறிக்கும் பனித்துளியின்
தாளச்சத்தம் கேட்டதுண்டா ??
இயற்கையின் காதலை உணர்ந்ததுண்டா ?
உன் நெஞ்சம் மகிழ்ந்து நிறைந்த்துண்டா ??
இதயத்தில் சங்கீதம் கேட்டதுண்டா ??
இமைகளில் இசைச்சரம் பார்த்ததுண்டா.. ?
இதழ் பாடும் மௌன ராகம் ரசித்ததுண்டா ??
உன்னை பிரிந்த இதயத்தின் ஒப்பாரி கேட்டதுண்டா.?/
உயிர் உருகும் உச்சத்தில்.. உன்னை நினைக்கும் நெஞ்சத்தின் உலகதிரும் ஓலம் அதை கேட்டதுண்டா ??
வழியின்றி வெற்றியில்லை..
காதலில் வலிமட்டுமின்றி வேறில்லை..
Comments
Post a Comment