என் எழுத்துக்களின் உயிர்



உன்னை காணும் வரை என் எழுத்துக்கள் யாவும் உயிர் பெறவில்லை
என் எண்ணங்கள் யாவும் உயரவுமில்லை
என் மனம் உறக்கத்திலிருந்து எழவில்லை
பொன்னிற தூரிகையில் பூத்திட்ட புது சித்திரமோ
என் விழிகள் கண்டிராத விசித்திரமோ
மனதினை வருடி
உயிரை திருடி
என் வாழ்வில் வந்த புது உறவே
உன்னை கண்ட மறு நொடியிலே
என் எழுத்துக்கள் யாவும் பறக்கின்றதே
உனக்காகவே காத்திருந்து என் மனமும் உறங்க மாறுகின்றதே ...
உன்னை காணமல்  என் எழுதுகோல் பயனின்றி போயிருக்கும்..

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?