கன்னி தமிழில் வார்த்தைகள் தேடுகிறேன் என் கண்களில் உன் விழிகள் சங்கமித்த தருணத்தை கவி பாட .. பிறை நிலா நெற்றியிலே மின்னல் கீற்றாய்.. நெற்றி முடி அழகு ... என் இதயம் இடரும் விழி அழகு விழி மேல் வில் அழகு .. கனி போல கன்னம் அழகு .. கனி ரசம் பொங்கும் இதழ் அழகு .. கம்மல் தொங்கும் காது அழகு .. தங்க மங்கை கழுத்து அழகு தாவணி மறைத்த முன்னழகு .. தடுமாற வைக்கும் பின்னழகு .. கண்ணும் கண்ணும் சங்கமித்து காதல் கடல் பொங்கி விட்டது .. இவை அனைத்தையும் மிஞ்சி விட்டது .. கண்ணே உன்னை கண்டதும் . . குழந்தையாக மீண்டும் பிறந்து உன் கைகளில் தவழ்ந்திடவே ஏங்குது நெஞ்சம் .. ஏக்கத்தை புரிந்து கொள்வாயா கண்ணே .. உன் மடியி...
திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை “சுகாத்தியர்” என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது. சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார். ஔவையார் எழுதிய “மூதுரை” என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது. “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார். சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள்திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சு...
நண்பர்களுடன் சிறிது அரட்டை... அம்மாவுடன் சின்ன சின்ன சண்டைகள்... அலுவலகத்தின் கலந்துரையாடல்... அடுத்தவர்களுக்கு அறிவுரை... அறிவு சார்ந்த வாசிப்பு... ஆய்வுகளுக்கான திட்டமிடல்.. என சாதரணமாகவே இருந்த போதிலும் ஓ'வென அழுதுகொண்டிருந்த உள்மனதின் பேரிரைச்சல் உலகறியும் என்ற அவசியம் ஏதுமில்லை புத்தகங்களில் புதைந்து மீண்டு வருகையில் எத்தனையோ விஷயங்களை மறந்ததுண்டு... உன் நினைவுகள் மட்டும் விதிவிலக்கு. விவாதங்கள் இல்லை வீண் சண்டைகள் இல்லை.. ஆனாலும் நம்மிடையே ஏன் இந்த பிரிவு.. கேள்விகள் கேட்பது எளிது... நான் கேட்டுவிட்டேன் இனி காலம் பதில் சொல்லட்டும்.
Comments
Post a Comment