இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி - அசைவம்

இது முந்தைய பார்ட்டோட கன்டினியூவிட்டி தான் ஆனா கடந்த பதிவுல உறுதியளித்த மாதிரியே இது எக்ஸ்க்லூசிவ் அசைவம் போஸ்ட்.


இட்லிக்கான அசைவ சைட்டிஷ்கள் குழம்பு, குருமா, கிரேவி, வறுவல் என்று நான்கு வகைப்படும் அதாவது என் சிற்றறிவுக்கு எட்டியபடி. இரத்தப்பொறியல், சூப், கோலா உருண்டைகள் போன்றவைகளை உடன் கொறித்துக்கொள்ள வைத்துக்கொள்ளலாம் சரி வாங்க என் ஃபேவரெட் காம்போஸ்கள பாப்போம்.

சுட சுட இட்லி முன்றை எடுத்து முக்கோணமாக ஒரு தோராயமான பிரமீட் வடிவத்தில் அடுக்கி வைத்துக்கொண்டு அதன் தலைமேல் சூடான மீன் குழம்பு ஒரு கப்பை ஊற்றி குப்பென்று எழும் ஆவியில் மூச்சிழுத்து அந்த இட்லியின் மனம் + மீன்கொழம்பின் அரோமா இரண்டையும் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும். அதே தம்மில் இரண்டு வாய் இட்லி குழம்பு பட்டதும் படாததுமாக லபக் லபக் என்று முழுங்கி கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த ரவண்டில் குழம்புக்கு இட்லியை தொட்டுக்கொள்வது போல சாப்பிட வேண்டும்... இடையிடையே குழம்பில் போட்ட மீன் பீஸுகளை தனியாக கவனித்து கொள்ளுதல் சிறப்பு. மீன் + சீஸ் போட்டு செய்த கோலா பால்ஸ் இரண்டு உருண்டைகள் விழுங்கி ஃபினிசிங் டச்சாக தட்டில் மீதமிருக்கும் இட்லியை மின்குழம்பு ஊற்றி பிசைந்து அடித்து விட வேண்டியதுதான்.


அடுத்தாப்டி மட்டன் குழம்பு - மேக்சிமிம் மீன்குழம்புக்கு சொன்ன அதே டெம்ப்ளேட் தான் ஆனாலும் பிசைந்து அடித்தல் இதில் செட்டாகாது காரணம் கறிதுண்டுகள் மென்று சாப்பிட இட்லியும் துண்டு துண்டாக இருப்பதே உசிதம். ஸ்டார்ட்டிங் சூடான இட்லி கொழம்பு பட்டும் படாமல் சாப்பிடுதலில் இதற்கு மேட்சாக இரத்தப்பொறியல் வைத்துக்கொள்ளலாம். கடைசி ரவுண்டு இட்லிக்கு முன்பாக கொஞ்சம் சூப் குடித்தால் சூப்பராக இருக்கும்.

ஈரல் ஃப்ரை, சிக்கன் கிரேவி, கொழுப்பு வறுவல் போன்ற சைட்டிஷ்களுடனும் இட்லியை கடித்துகொள்ளலாம் சில சமையங்களில் அசைவம் கொஞ்சம் திகட்டும் நம்மால் நிறைய சாப்பிட முடியாது அச்சூழல்களில் நமக்கு இட்லிகள் பக்கத்துணையாக இருக்கும்.

கடந்த பதிவில் ஃபினிசிங் டச்சாக ஃபில்டர் காப்பி இருக்கும் ஆனால் அது சைவம் இது அசைவம் ஸ்பெசல் இவ்வகையில் டீ அல்லது காப்பிக்கு பதிலாக டெஸர்ட்ஸ் எனப்படிகிற இனிப்பு வகைகளை ஃபினிஷர்களாக கொள்ளுதல் கூடுதல் சிறப்பு...

கொத்து இட்லி என்றொரு டைப் இருக்கிறது. இந்த குக்கர் இட்லி அல்லது மினி இட்லி வகையராக்களில் கொஞ்சம் எடுத்து தோசைக்கல் மேல் பிய்த்து போட்டு அதன் தலையில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மிளகாய் தூள், உப்பு, மசாலா தூள் எல்லாம் போட்டு கொத்து பரோட்டா போல கொத்தி கிளறி கூமாச்சியாக குவித்து இரண்டு முட்டை உடைத்து அதன்மேல் ஊற்றி பிரட்டி தருவார்கள். முட்டை மட்டுமல்லாமல் சிக்கன் / மட்டன் குழம்பு ஊற்றியும் தருவார்கள் இதுவும் ஒரு நச் பேக்கேஜ் தான்.

இவையெல்லாம் நான் இதுவரை முயற்ச்சித்திருக்கும் காம்போக்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன்... உதாரணமாக மல்லி இட்லி, பெப்பர் இட்லி போன்ற ஃபேன்சி வெரைட்டிகள் இதில் ஆதிகாலத்து ஃபேன்சி ஐட்டம் ரவா இட்லி இதெல்லாம் சைட்டிஷ்களுக்கு அப்பாற்பட்டவை என்னைப்பொறுத்தவரை இவை மெயின்டிஷ்ஷே அல்ல ஸ்னாக்ஸ் வகையறாக்கள்.

சைட்டிஷ் சைவமோ அசைவமோ கோர் எலமென்ட் ஆன இட்லி நம்ம ஹெல்த்துக்கு ரொம்ப ரொம்ப ஹார்ம்லெஸ் ஆறு மாதமே ஆன குழந்தைக்கு கூட குடுக்கற அளவு பாதுகாப்பான உணவு இந்த இட்லிங்க மக்களே.

வேறொரு தருணத்துல வேறொரு டாப்பிக்ல சந்திப்போம்... டாட்டா பைபை.!

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?