உன்னாலே உன்னாலே!!
கன்னி தமிழில் வார்த்தைகள் தேடுகிறேன்
என் கண்களில் உன் விழிகள் சங்கமித்த தருணத்தை கவி பாட ..
பிறை நிலா
நெற்றியிலே மின்னல் கீற்றாய்..
நெற்றி முடி அழகு ...
என் இதயம் இடரும் விழி அழகு
என் கண்களில் உன் விழிகள் சங்கமித்த தருணத்தை கவி பாட ..
பிறை நிலா
நெற்றியிலே மின்னல் கீற்றாய்..
நெற்றி முடி அழகு ...
என் இதயம் இடரும் விழி அழகு
விழி மேல் வில் அழகு ..
கனி போல கன்னம் அழகு ..
கனி ரசம் பொங்கும் இதழ் அழகு ..
கம்மல் தொங்கும் காது அழகு ..
தங்க மங்கை கழுத்து அழகு
தாவணி மறைத்த முன்னழகு ..
தடுமாற வைக்கும் பின்னழகு ..
கண்ணும் கண்ணும் சங்கமித்து
காதல் கடல் பொங்கி விட்டது ..
இவை அனைத்தையும் மிஞ்சி விட்டது ..
கண்ணே உன்னை கண்டதும் . .
குழந்தையாக மீண்டும் பிறந்து உன் கைகளில் தவழ்ந்திடவே ஏங்குது நெஞ்சம் ..
ஏக்கத்தை புரிந்து கொள்வாயா கண்ணே ..
உன் மடியினில் இடம் தருவாயா பெண்ணே ??
உன் மடியினில் என் தலை சாய்க்க..
என் மார்பினில் நீ முகம் புதைக்க ..
தழைக்குமா என் தலைமுறை ..
உன்னாலே உன்னாலே ..!!
கனி போல கன்னம் அழகு ..
கனி ரசம் பொங்கும் இதழ் அழகு ..
கம்மல் தொங்கும் காது அழகு ..
தங்க மங்கை கழுத்து அழகு
தாவணி மறைத்த முன்னழகு ..
தடுமாற வைக்கும் பின்னழகு ..
கண்ணும் கண்ணும் சங்கமித்து
காதல் கடல் பொங்கி விட்டது ..
இவை அனைத்தையும் மிஞ்சி விட்டது ..
கண்ணே உன்னை கண்டதும் . .
குழந்தையாக மீண்டும் பிறந்து உன் கைகளில் தவழ்ந்திடவே ஏங்குது நெஞ்சம் ..
ஏக்கத்தை புரிந்து கொள்வாயா கண்ணே ..
உன் மடியினில் இடம் தருவாயா பெண்ணே ??
உன் மடியினில் என் தலை சாய்க்க..
என் மார்பினில் நீ முகம் புதைக்க ..
தழைக்குமா என் தலைமுறை ..
உன்னாலே உன்னாலே ..!!
- கிறுக்கன்
உன் மடியினில் என் தலை சாய்க்க..
ReplyDeleteஎன் மார்பினில் நீ முகம் புதைக்க ..
தழைக்குமா என் தலைமுறை ..
உன்னாலே உன்னாலே ..!!