கடவுளின் கைபேசி எண் - ஒரு புத்தகத்தின் பயணக்கதை

சில வாரங்களுக்கு முன்பாக ட்விட்டரில் பாமரக்கவி என்னும் நண்பர் ஒருவருடைய கடவுளின் கைபேசி எண் என்கின்ற புத்தகம் பற்றிய இடுக்கை ஒன்றை காண நேர்ந்தது... அடடே என்னது கடவுளின் கைபேசி எண்ணா... பெயரே வித்தியாசமாக இருக்கிறதே இதை வாசித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. உடனடியாக எழுத்தாளருடைய ட்விட்டர் கணக்கை தேடி கண்டுபிடித்து தொடர்பு கொண்டு புத்தகங்களை அனுப்ப இயலுமா என்று கேட்டேன் அவரும் முகவரியை வாங்கி கொண்டு சில நாட்களில் அனுப்புவதாக தெரிவித்தார். இரண்டு நாட்களில் மீண்டும் தகவல் அனுப்பி புத்தகங்களை அனுப்பியிருப்பதாகவும் வாசித்துவிட்டு கருத்துக்களைக் கூறுமாறும் தெரிவித்திருந்தார். இரண்டொரு நாட்கள் ஓடின, நான் நண்பன் ஒருவனுடன் தேநீர்க்கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது அந்தப் பக்கமாக வந்த போஸ்ட்மேன் தம்பி உங்க வீட்டுக்கு தான் போய்கிட்டு இருக்கேன் உங்களுக்கு தபால் வந்து இருக்கு இந்தாங்க என்று ஒரு பார்சலை கொடுத்தார். அவர் பையில் இருந்து பார்சல் எடுக்கும் போதே அது இந்த புத்தகம் தான் என்று யூகித்து விட்டேன். என்ன ஒரு ஆச்சரியம் நான் கேட்டிருந்த கடவுளின் கைபேசி எண் என்கின்ற புத்த...