Posts

Showing posts from January, 2019

கோவை மினி மராத்தான் - ஒரு ஜாலி அனுபவம்

கோவையை சார்ந்த டெஃப் லீடர்ஸ் அசோசியேசனும், ரோட்டரி ஈஸ்ட் சங்கமும் சேர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மினி மாரத்தான் என்கிற நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இரண்டாம் ஆண்டு நானும் நண்பர்களும் குழுவாக கலந்து கொண்டோம். கடந்த ஆண்டு என்னால் பங்கு கொள்ள முடியவில்லை, ஆகவே இந்த ஆண்டு தவற விடக்கூடாது என்பதற்காகவே ஒரு வாரம் முன்பே நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டு விட்டேன். (சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சலடி பிஜிஎம்) பொதுவாக நான் ஊருக்குள்ளே எங்கேயேனும் பயணிப்பது என்றால் உடன்வரும் நட்பூக்கள், அண்ணன்கள் கார் வைத்திருப்பின் அவர்களோடு சென்றுவிடுவேன் அல்லது என் வீல்சேரை டிஸ்மான்டில் செய்து வைக்கும் அளவு இடவசதி உள்ள கார் ஏதேனும் புக் செய்து பயணிப்பேன். சில சமயம் காருக்கு பதிலாக ஸ்வர்கா பவுண்டேசனின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயணிக்க ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாரதி எனும் சிறப்பு வாகனத்திலும் செல்வேன்... இந்த மினி மாரத்தானுக்கு சாரதியில் போலாம் என்று தோன்றியது... ஜனவரி 4 வெள்ளிக்கிழமை காலை சாரதியின் பொறுப்பாளர் ஆனந்த் அண்ணா அவர்களை அழைத்து சாரத...