Posts

Showing posts from December, 2018

பெருக்கல் கணக்கில் லவ்

Image
பல ஆண்டுகளுக்கு முன்பாக யூடியூப் சேனல்களில் பல்வேறு பேச்சாளர்களின் காணொளிகளை தேடித்தேடி பார்த்துக் கொண்டிருந்த காலம் தமிழ் சூழலில் பேச்சாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் அல்லது என் சிற்றறிவுக்கு எட்டியிருந்தது அவ்வளவு மட்டும்தான். பேச்சாளர்கள் என்றாலே அவர்கள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சன் டிவியிலும் அல்லது வேறு ஏதேனும் ஒரு தொலைக்காட்சியிலும் "நடுவர் அவர்களே..." என்று பட்டிமன்றங்களிலும் அல்லது வாரம் ஒரு முறை பெரும் விளம்பர தொகுப்புகளுக்கு இடையே கொஞ்சமாக வந்து சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறேன் என்கிற பெயரில் காலம் சென்ற நடிகர்கள் போல குரல் மாற்றி பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்கின்ற நபர்களாகவும் தான் யோசித்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல இலக்கியம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் குழந்தைகளை நோக்கியும் இளைஞர்களை நோக்கியும் பரந்த சிந்தனைகளோடு பேசக்கூடிய பேராசிரியர்கள் சிந்தனைவாதிகள் எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இயங்கக்கூடிய தளங்கள் மட்டும்தான் பரவலான மனிதர்களுக்கு எட்டக்கூடிய இடத...

மீள் - 2018

       மாதம் தோறும் எப்படியேனும் எழுதிப் பதிவிட வேண்டும் என்று எண்ணிய இந்த வலைப்பூவில் ஆண்டுக்கு ஒருமுறை என்றும் எழுதி பதிவிடும் சூழலில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது என்னுடைய சொந்த கண்ணாடி பெண்ணே என்னை காரித்துப்பி கேலி செய்யும் சுய எள்ளல் மிகுந்த ஒரு சூழலில் இருக்கிறேன் என்பதை வெட்கத்தோடு உணரும் தருணங்களில் இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணமும் ஒன்று என்று சொல்லலாம். 2019 ஜனவரி முதலாவது முடிந்தவரை மாதம் ஒருமுறை போஸ்ட் இந்த வலைப்பூவில் கட்டாயம் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறேன். இனி கடந்த ஆண்டை பற்றிய ஒரு சின்ன மீள்பார்வை. உண்மையை கூற வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஜூன் மாதம் வரை நடந்த எதுவும் அதாவது வாங்கிய அடிகள் எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி நினைவில் இல்லை... ஆனால் ஜூன் மாதத்தில் நமது பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகமானதொரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தது அந்தக் கொண்டாட்டத்தின் நீட்சியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகான சென்னை பயணம் அமையப்பெற்றுள்ளது அந்த குறிப்பிட்ட பயணமும் மனதளவிலும் பொருளாதார அளவிலும் நமக்கு எத்தகைய சிரமமும் தராமல் கண்ட...